DEVADANAMPETTAI

21.08.2023 – தேவதானம் பேட்டை கிராம ஜோதி மாமலை சன்மார்க்க பணிகள்.

21.8.23 இன்று நயம் பாடி கிராமத்தில் கூலி ஆட்கள் மூலம் 200 வாழை கன்றுகள் (100 பூ வாழை 100 இலக்கி வாழை) எடுக்கப்பட்டு ஜோதி மாமலைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. வாழைக்கன்றுகளுக்கான இயற்கை உரம் தயாராக உள்ளது. நாளை 200 கன்றுகள் நடுவதற்கு குழிகள் தயாராக உள்ளன. மொத்தம் 500 குழிகள்.
Read more

28.5.23 – ஜோதிமாமலை பூமி பூஜை – (ஞாயிறு)

குருவருளாலும், திருவருளாலும், தயா குணம் கொண்ட 68 பூமி தான நன்கொடையாளர்களின் பேருதவியால், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமம், வள்ளல் பெருமான் தவம் செய்த கரியமாமலை அடிவாரம், ஜோதிமாமலையில் கிராம சேவையை (தர்மச்சாலை, தவ சாலை, கோசாலை, யோக சாலை, மூலிகை சோலை போன்ற பல்வேறு சமுதாயப் பணிகள்) விரிவாக்கம் செய்யும் பொருட்டு 4.5 ஏக்கர் பூமியை கிணறு, பம்ப்செட், இலவச மின்சார இணைப்போடு இறை வழங்கியிருக்கிறது. தற்போது ஜோதிமாமலையில் தற்காலிக செட் அமைக்க, சிவில், எலக்ட்ரிகல், கார்பெண்டர், JCB மூலம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Read more

28.5.23 – ஜோதி மாமலை பூமி பூஜை

செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமம், நமது ஜோதிமாமலையில் 28.5.23 ஞாயிற்று கிழமை காலையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளாசிபெற்ற மூத்த சன்மார்க்கிகள் திரு நாகை சைவமணி மற்றும் திரு ராமமூர்த்தி ஐயா தலைமையில் பூமி பூஜை நடைபெற உள்ளது.
Read more

28.03.2023 – கிராம சேவைக்காக – தேவதனாம்பேட்டை கரியமாமலை அடிவாரத்தில் பூமி தானம்…

திருவண்ணாமலை அருகில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில், மலையும் மலை சார்ந்த தேவதானாம்பேட்டை கிராமத்தில், முதியோர் இல்லம், மூலிகை சோலை, கோசாலை, தருமச்சாலை, அடர்வனம், அமைக்க இறையருள் 3 ஏக்கர் விளை பூமி அமைய திருவுள்ளம் ஆணையிட்டுள்ளது.
Read more

25.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பரிவுடன், வரியுடன் நிற்காமல், "நீடுறு பிணியால் வருந்துகின்றோர் நேருர கண்டு உளம் துடித்தேன்" என்று எழுதிய கருணை வடிவான வள்ளலார், எந்த ஆதாரமும் இல்லாத, ஏழைகளின் பசி தீர்ப்பதுடன், வைத்திய சாலை அமைத்து, அவர்களின் பிணி போக்க, அறிவுறுத்தியதால், அவர் வழி பணியில், பல்வேறு தருமச்சாலைகள் அமைத்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து உயிர் உபகார பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
Read more

09.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

தீபம் அறக்கட்டளையின் தூண்களாக விளங்கும், நித்ய தீப தருமச்சாலை பூமி தானத்திற்கும், கட்டிட திருப்பணிக்கும் பாரி போல், மாரி போல், வாரி வழங்கும் வள்ளல்களுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடை வழங்கும் வள்ளல்களுக்கும், தீபம் நன்கொடையாளர்களுக்கும் விண்ணப்பம்.
Read more