Month: September 2023

28.09.2023 – 449வது வார அகவல் பாராயணம்

தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது…
Read more

21.09.2023 – 448வது வார அகவல் பாராயணம்

21.09.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

19.09.2023 – கிராம சேவை

இறையருளால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் சமுதாய பணிகளை (தினசரி 2000 அன்பர்களுக்கு அன்னம்பாலித்தல், இதுவரை 1260 மாணவர்களுக்கு Rs 73 லட்சம் கல்வி உதவி, 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு மாதந்தோறும் வாழ்வாதார உதவி, பிணியால் வருந்தும் 7 அன்பர்களுக்கு மாதந்தோறும் ₹35000/- மருத்துவ உதவி...போன்ற பல்வேறு மனித நேயப்பணிகள்) தங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் நன்கொடையால், தடை படாமல் எல்லா காலங்களிலும், எல்லா நேரங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே!!!
Read more

15.09.2023 – 447வது வார அகவல் பாராயணம்

தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது…
Read more

11.09.2023 – வடலூர் ஞானசபை ஜோதி தரிசனம்

ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள் கடந்த 125 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய தருமச்சாலை அடுப்பில் நாள் முழுவதும், காய் கறி வெட்டுதல், சமையல் செய்தல், பாத்திரம் துலக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற ஜீவ காருண்ய பணிகள் இறையருளால் செய்து வருகிறார்கள். தீபம் அறக்கட்டளையின் சார்பாக 30 கிலோ கொண்டை கடலையும், வாழை இலை உபயமும் செய்கிறோம்.
Read more

09.09.23 – அன்று மெய்யூர் கிராமத்தில் கிராம சேவை – வாழ்வாதார உதவி

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து அனைவருக்கும் வயிறார உணவு வழங்கி கிராம சேவை செய்தது.
Read more

07.09.2023 – 447வது வார அகவல் பாராயணம்

07.09.2023 – 447வது வார அகவல் பாராயணம் 07.09.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். […]
Read more

02/09/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் இலவசமாக சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

01.09.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more