தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்…

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளாகிய
தினசரி 2000 அன்பர்களின் பசி போக்குதல், ..
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல்,
மருத்துவ உதவி செய்தல்,
மாற்று திறனாளி மற்றும் பார்வையற்றோர் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி மளிகை பொருட்கள் வழங்குதல்,
கோடைகால நீர்மோர் வழங்குதல்
தொடர் கிராமசேவை
ஜோதிமாமலை ஆதரவற்றோர் இல்லம் அமைத்தல்
போன்ற பல்வேறு சமுதாய பணிகளுக்கு, தாங்கள் மனமுவந்து வாரி வழங்கிய அருள்நிதியை, குணநிதியை, கருணைமாநிதியை, நன்கொடையை, தீபம் அறக்கட்டளை நன்றியோடு வரப்பெற்றோம்.

நோக்கம்: – மக்களின் பசி போக்குதல் (அன்னதானம்) – தர்மச்சாலை அட்டவணையின் படி… அல்லது தாங்கள் விரும்பிய பிறந்த/திருமண நாளில்…

தினசரி நடைபெறும் அன்னதான நிகழ்வுகளை காண அறக்கட்டளையின் YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்:
https://www.youtube.com/@DEEPAMTRUSTVELACHERY

தினசரி மூலிகை கஞ்சி வழங்குதல்
https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqU1clnT_rbGcGJ8njhdjBda

தினசரி மதியம் அன்னதானம் வழங்குதல்
https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqXOZvjP8iMIF1CJnXgrq2E6

தினசரி இரவு அன்னதானம் வழங்குதல்
https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqWiC2RckqtEXtDN5Uiu7qmv

மெய்யூரில் தினசரி குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqVBwr57YXv0ZqZYp0dCYIah

சாலையோரம் தேடிச் சென்று உணவு வழங்குதல்
https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqVkZj3Ttq3HOhP2RJKhJ6NF

தாங்கள் அளித்த அருள்நிதியை, தீபம் தாங்கள் எண்ணிய வண்ணம் முழுமையாக இந்த சமுதாயத்திற்கு பசியாற்றுவித்தலுக்கு மற்றும் பல்வேறு அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை தீபம் உறுதி செய்கிறது. தீபம் அறக்கட்டளை அரசு பதிவுபெற்ற, தணிக்கைக்கு உட்பட்ட, 80G வரிவிலக்குப் பெற்ற, CSR சான்றிதழ் அளிக்கப்பட்ட, தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் விருது பெற்ற, ஓர் ஆன்மநேய அறத் தொண்டு நிறுவனம்.

இறையருள் பெற்ற தங்கள் “திருவருள் அருள்நிதிக்கு” கோடான கோடி நன்றி! எங்கு தர்மம் உள்ளதோ அங்கு இறைவன் நீக்கமற நிரம்பி உள்ளார். ஆதலால் தர்ம குணம் கொண்ட தங்களை வணங்கி மகிழ்கிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் !
பசியால் இளைத்தவர் தமை கண்டு உளம் பதைத்தேன் !
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் !
பசி தீர்ப்பதே பரம புண்ணியம்!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!
அன்னதானமே மகாதானம்!
அன்னதானமே பிரதானம்!
அதிதி தேவோ பவ!
உணவிட்டு உண்,
இவையெல்லாம் அன்னதானத்தை பற்றி,
பசி ஆற்றுவித்தலை பற்றி,
ஆகாரம் அளிப்பதை பற்றி, மகான்கள், மதங்கள், மறைகள் மக்களுக்கு போதித்தவை.

பசிக்குறிப்பறிந்து, தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தர்ம சாலையிலும், தமிழகத்தின் பல்வேறு கிராம தர்மசாலை மூலமும் தினசரி 2000 அன்பர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நிதி நிலையைப் பொருத்து மேலும் விரைவில் பல்வேறு கிராம தர்ம சாலைகள் துவங்க இருக்கிறோம். தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு பட்டினியால் அவதியுறும் ரோட்டோரம் ஆதரவற்றவர்களை தேடித்தேடி வாடி இருக்கும் ஏழைகளை நாடிநாடி, ஓடி ஓடி, டாட்டா ஏஸ் வாகனம் மூலம் உணவளிக்க, மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு வழங்க, “அருள் நிதியை, கருணை மாநிதியை, நன்கொடையை” வழங்கும் தாங்கள் மனித தெய்வங்களாக எங்களுக்கு காட்சி தருகிறீர்கள். மகத்தான தர்ம சேவையாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, நித்ய தீப தர்மசாலை மூலம், பொருளை அருளாக மாற்றக்கூடிய அற்புத புண்ணிய பலனை எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கொடுத்திருக்கிறார். எண்ணிலடங்கா கோடி கோடி வணக்கங்கள். வானளவு வாழ்த்துக்கள்!

இச்செய்தி உடன் இணைத்திருக்கும் அன்னதான காட்சிகளை படங்களாக காணொளிகளாக கண்டு மகிழுங்கள்!
இது படங்கள் அல்ல, வாழ்க்கை பாடம்!
இது விளம்பரம் அல்ல; இறைவனின் திருவிளையாடல்.
இது பொழுதுபோக்கு அல்ல; திருவோங்கு புண்ணியச் செயல்.
நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து, விளங்கும் இறைவனின் திருச்செயல்.

தொடர்ந்து தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் மாதந்தோறும் தானதர்மங்கள் செய்து, இறைவனுடைய அருள் பெற்று நீடூழி வாழ்க! பல்லாண்டு வாழ்க ! என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது. ஆண்டு பல நீண்டு வாழ வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

வாழ்க தர்மம் !
வளர்க தர்மம்!

தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம்!

தீப அறக்கட்டளையின் அன்னதானச் செயல்பாடுகள் குறித்த தங்களுடைய எண்ணங்களை ஆலோசனைகளை புரிதல்களை, விருப்பமுள்ளவர்கள் தீபத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.
தர்மம் செய்த
தாங்களும்,
தங்கள் குடும்பமும்,
தங்கள் சந்ததிகளும்,
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
இன்புற்று வாழ்க!
வாழ்வாங்கு வாழ்க!
பல்லாண்டு வாழ்க !
நீடூழி வாழ்க! என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறது.

தாங்கள் உணர்ந்த இந்த தர்மத்தின் பலனானது, தங்களைச் சார்ந்த உற்றார் உறவினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களுக்கு, தெரிவித்து அனைவரும் தர்ம பாதையில் பயணித்து, இவ்வுலகை தர்ம பூமியாக… சத்திய பூமியாக …சன்மார்க்க பூமியாக …சமாதான பூமியாக …மாற்ற முயல்வோம். இப்பிறவியின் பலனை, இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை அடைவோம்.

தங்கள் தர்மத்திற்கு தலை வணங்கி, வாழ்த்தி மகிழும்…

தயவுடன்…
என்றென்றும் சமுதாயப்பணியில்…
தீபம் பாலா
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635
(இது ஓர் அரசு பதிவுபெற்ற, 80G வருமான வரி விலக்கு அளிக்கப்பட்ட, தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் விருதை நேரில் பெற்ற ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்)

சமுதாயப் பணியில் தொடர்ந்து 27 ஆண்டுகளாக …

www.deepamtrust.org

Leave A Comment