Month: October 2022

30.10.22 அன்று மெய்யூர் கிராமத்தில் நாள் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை 21 தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து தீபாவளி கொண்டாடியது.
Read more

ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் மெய்யூர் கிராம சேவை…

வரும் ஞாயிற்றுக்கிழமை 30 அக்டோபர் அன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் அருகில் 3 கிராமங்களில், குடிசைகளில் வாழும் 100 குடும்பங்களுக்கு நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை நடைபெற உள்ளது.
Read more

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தீபத்தின் தொடர் கல்வி உதவி – இதுவரை 1194 மாணவ மாணவிகளுக்கு உதவி

நோய்வாய்பட்ட தந்தை, தனியார் நிறுவனத்தில் ஸ்வீப்பராக பணிபுரியும் தாய், செல்வி M பவித்ரா அவர்கள் Annai Velankanni College for Women கல்லூரியில் BBA பயில Rs 30,000/- கல்லூரி பெயரில் காசோலை நேற்று நேரில் வழங்கப்பட்டது.
Read more

401வது வார அகவல் பாராயணம்

27.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

தினம் ஒரு மூலிகை – கூலி தொழிலாளிகளுக்கு

பசியால் வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதே "கடவுள் வழிபாடு"; அதுவே ஜீவகாருண்யம் என்ற திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சன்மார்க்கப்பாதையில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில், கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு தினசரி வயிறார மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.
Read more

6 கிராமங்களில் தீபாவளி இனிப்புகள்…

தீபாவளியை முன்னிட்டு மகிழ்வித்து மகிழ்தல் என்ற ஜீவகாருண்யா பணியாக தீபம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மதுராந்தகம் சுற்றியுள்ள ஏழ்மை நிலையில் உள்ள கிராம பகுதிகளில் நேரில் சென்று தீபாவளி இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப்பணி – குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தீபாவளி இனிப்புகள் மற்றும் கார வகைகள்.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு, 10 குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு மற்றும் 8 கிராமங்களுக்கு தீபாவளி இனிப்புகளும் மற்றும் கார வகைகளும் வழங்கி வருகிறது.
Read more

400வது வார அகவல் பாராயணம்

20.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

கடந்த 16 ஆண்டுகளாக தீபத்தின் தீபாவளி இனிப்புகள்….

தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலுள்ள 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்களுக்கு, மெய்யூர் கிராம பழங்குடி ஏழை குடும்பங்களுக்கு, மதுராந்தகம் அருகில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் ஐந்து கிராமங்களில் தீபாவளி இனிப்பும், காரமும் (5000 லட்டுகள் மற்றும் 20 கிலோ காராபூந்தி) தருமச்சாலையில் தயார்செய்து நேரில் சென்று தீபாவளியை முன்னிட்டு வழங்க இருக்கிறோம். மேலும் இனிப்பு காரத்துடன் மெய்யூர் கிராம 100 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்க இருக்கிறோம்.
Read more

மாத பூசம்

திங்கட்கிழமை இரவு(17.10.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார்.
Read more