Month: December 2018

25.12.2018 – கஜா புயல் மூன்றாம் கட்ட சேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது. முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள்.
Read more

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக இருக்கிறது.
Read more

01.12.2018 – கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப்பொருட்கள்

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
Read more