Month: November 2021

தினசரி சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசி போக்கும் தொடர் சமுதாயப் பணி.

சென்னை கொட்டிவாக்கத்தில் சைவ ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் *திரு முத்துராமலிங்கம்* என்ற 30 வயது இளைஞர், மற்ற ஆன்ம அன்பர்களை போல் தினசரி இரவில் தருமச்சாலையில் சாப்பிட வருகிறார். வயிறார சாப்பிட்டு முடித்த பின், தருமச் சாலையில் உள்ள நித்திய ஜோதியை வணங்கி, வள்ளலார் காலடியில் தன்னுடைய தின வருமானத்திலிருந்து தினமும் ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 நன்கொடையாக வழங்குகிறார்.
Read more

*தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*

மகாபாரதத்தில் கடவுள் கண்ணனே அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் கர்ணனிடம்.
Read more

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்

கொரோனா காலத்தில் மட்டும், கடந்த 18 மாதங்களில் நித்ய தீப தருமச்சாலையில் தினசரி 100 கிலோ அரிசி வீதம் இதுவரை 18 மாதங்களில் 50 டன் அரிசியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களாக ...தர்ம சாலை தேடி வருபவர்களுக்கும், ரோடு ஓரங்களில் ஆதரவற்று வாழ்பவர்களுக்கும், இறை அருளாலும், உயிர் உபகாரம் செய்யும் நல்ல உள்ளங்களால் தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெறும்.
Read more