வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
நாள் : 18.12.24 (புதன்கிழமை)
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 141 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய தருமச்சாலை அடுப்பில் நாள் முழுவதும், காய் கறி வெட்டுதல், சமையல் செய்தல், பாத்திரம் துலக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற ஜீவ காருண்ய பணிகள் இறையருளால் செய்து வருகிறார்கள்.

தீபம் அறக்கட்டளையின் சார்பாக மாதந்தோறும் 30 கிலோ கொண்டை கடலையும், ₹10,000 க்கு வாழை இலை உபயமும் செய்யப்படுகிறது. கொண்டை கடலை உபயம் திரு N ரமேஷ். மற்றும் வாழை இலைகளுக்கு உபயம் செய்ய… விரும்பி வழங்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சீட்டர் வேன் புறப்படும் நாள்: 17.12.24 (செவ்வாய்க்கிழமை)
நேரம் : இரவு 9 மணி
இடம்: நித்ய தீப தருமச்சாலை, 7 தருமச்சாலை வீதி, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
வேனுக்கு கட்டணமில்லை. விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம்.

இரண்டு இரவுகள் பயணம், நாள் முழுவதும் தொண்டு, ஜோதி தரிசனம் காண விருப்பமுள்ளவர்கள் முன் பதிவிற்கு திரு S.கணபதி ஐயா அவர்களை 9789284261 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
என்றென்றும் சன்மார்க்க ஜீவகாருண்யப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
தீபம் அலுவலகம்: 044 4335 8242
தீபம் திரு S .கணபதி : 9789284261

Leave A Comment