தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தீபம் அறக்கட்டளையின்
நிர்வாகிகளுக்கும்,
ஓயாமல் உழைக்கும் திருத்தொண்டர்களுக்கும்,
அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கும் அருளாளர்களுக்கும்,
தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும்,
தைப்பூச திருநாள் வாழ்த்துக்களை வடலூரில் இருந்து பதிவு செய்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!

தெய்வ ரகசியம்
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூர் தைப்பூசத் திருநாள் ரகசியம், பெருமானார் வருடத்திற்கு ஒருமுறை தைப்பூசத் திருநாள் அன்று ஆறு கால ஜோதி தரிசனம் உபதேசித்து அருள் பாலித்தார். தைப்பூசத் திருநாள் அன்று பிரபஞ்சத்தின் தலைமை பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய ஸ்ரீ நடராஜபதி ஆதிசக்தி ஆகிய சிவ காம சுந்தரி வள்ளி தாயாருடன் எட்டு அம்பலத்தில் பார்வதிபுரம் மக்கள் தானமாக கொடுத்த மங்கள திரு நிலத்தில் விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் பயன்பெற்று அருளைப் பெற வேண்டி திரு நடனம் புரியும் அற்புதக் மங்களத் திரு காட்சி காலை 6:00 மணி ஜோதி தரிசன ரகசியம் நிறை பௌர்ணமி ஆரம்பம் கிழக்கில் மங்கள சூரிய உதயம் மேற்கில் மங்கள நிறை சந்திரன் அஸ்தமனம் நடுவில் சத்திய ஞான திருச்சபையில் பிரபஞ்சத்தின் தலைமை பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சத்திய ஞான மங்கள தலைமை பிரபஞ்ச ஜோதி, பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு தன்னுடைய திருக்கரத்தால் மங்கள தீப ஆராதனை மூலம் மரியாதை செலுத்தும் அற்புதக் காட்சி. அவ்வமயம் விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் அருளை பெறும் அற்புதக் காட்சி மிகவும் சக்தி வாய்ந்தது.

அடுத்து 10.00 மணி ஜோதி ரகசியம் பெருமானார், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய கோடியிலும் பல் கோடி இறைத்தலைவர்களுக்கு தன் திருக்கரத்தால் மங்கள தீப ஆராதனை மூலம மரியாதை செலுத்தும் அற்புதக்காட்சி.

அடுத்து 1.00 மணி ஜோதி ரகசியம் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய கோடியிலும் பல்கோடி பூதத் தலைவர்களுக்கு பெருமானார் மங்கள தீப ஆராதனை மூலம் தன் திருக்கரத்தால் மரியாதை செலுத்தும் அற்புதக் காட்சி.

அடுத்து7.00 ஜோதி ரகசியம் சக்திக்கு எல்லாம் தலைமை சக்தியாக ஆதி சக்தி சிவகாமி சுந்தரி வள்ளி தாயருக்கு தன் திருக்கரத்தால் பெருமானார் மங்கள தீப ஆராதனை செய்து மரியாதை செலுத்தும் அற்புதக் காட்சி மிகவும் சக்தி வாய்ந்தது (கீழ்க்கண்ட மூவரும் வரிசை வைத்து மரியாதை செலுத்த வேண்டும் குறிப்பாக குடும்பத் தலைவிகள் ).

அடுத்து 10.00 மணி ஜோதி ரகசியம் கோடியிலும் பல் கோடி ருத்திரர்கள் உயிர் தர்மத்தை காக்கும் எமதர்ம ராஜர்கள் தேவர்கள் தேவதைகள் இறை தூதுவர்கள் ரிஷிகள் மகரிஷிகள் யோகிகள் ஞானிகள் முனிவர்கள் சித்தர்கள் மற்றும் ஏனையவர்க்கு பெருமானார் தன் திருக்கரத்தால் மங்கள தீப ஆராதனை மூலம் மரியாதை செலுத்தும் அற்புதக் காட்சி.

அடுத்து மறுநாள் காலை 5.00 மணி ஜோதி ரகசியம் 84 லட்சம் யோனி பேதங்களுக்குள் இருக்கும் மங்கள ஆன்மாவிற்கு பெருமானார் மங்கள தீப ஆராதனை மூலம் தன் திருக்கரத்தால் மரியாதை செலுத்தும் அற்புதக் காட்சி.

இந்த ஆறு கால ஜோதியானது நிறை பௌர்ணமியில் ஆரம்பித்து நிறை பௌர்ணமியில் முடிவு பெறும் இதுதான் உண்மை. இனி வரும் காலத்தால் அழியாத அற்புத பதிவு. தெய்வ உத்தரவு அன்றைய தினம் கோடியிலும் பல்கோடி, படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய தலைமைத் இறை தலைவர்கள் மற்றும் கோடியிலும் பல்கோடி நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பூதத்தலைவர்கள் மற்றும் கோடியிலும் பல் கோடி ருத்திரர்கள் எமதர்மராஜர்கள் தேவர்கள் தேவதைகள் ரிஷிகள் யோகிகள் மகரிஷிகள் ஞானிகள் முனிவர்கள் சித்தர்கள் மற்றும் ஏனைய விண்ணுலகத்தோர்கள் மற்றும் மண்ணுலகத்தோர்கள் அன்றைய தைப்பூசப் திரு நாளில் திரு வடலூரில் தரிசனம் பெற்று பூரண அருளை பெரும் அற்புதக் காட்சி அன்றைய தினம் தகுதி உடையவர்களுக்கு மரணம் இல்லா பெருவாழ்வு கொடுக்கும் அற்புத நிகழ்வு விண்ணுலகமும் மண்ணுலகமும் நிரம்பி வழியும் அற்புதக்காட்சி இதைத்தான் பெருமானார் தைப்பூசத் திருநாளில் நன் நாளில் வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கு வந்தால் பெறலாம் நல் வரமே என்று விண்ணுலகத்தாறையும் மண்ணுலகத்துறையும் தைப்பூசத் திருநாள் அன்று அன்போடு அழைக்கின்றார்.

அனைவரும் வருக பேரருள் பெறுக மங்களத் திருமுகத்தில் மங்களத் திருநீறு தரித்து வரவும் திருநீர் இல்லையெனில் இறை அருள் பெற முடியாது இது சத்தியம்.

எதிர்காலத்தில் திரு அருள் காரியப்படும். அனைவரும் பயன்பெற நல் உள்ளத்தோடு அனைவருக்கும் உடன் பகிரவும் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை சத்திய ஞான ஜோதியின் மேல் ஆணையிட்டு கூறினேன் போற்றின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
தயவுடன் …
என்றென்றும் சன்மார்க்க சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment