தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு..🍚🍚🍚🍚🍚
கோவில் உண்டியலை நிரப்புவதை காட்டிலும், ஏழையின் வயிற்றை நிரப்புவதை இறைவன் விரும்புகிறான்.
🪷🍚🪷🍚🪷🍚🪷🍚🪷🍚
தயவுடையீர்,
திருவருளால், குருவருளால், சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2500 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது.
தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளுக்கு வாகனத்தில் மூலிகை கஞ்சி துவையலுடன், டாடா ஏஸ் வாகனத்தில் தினசரி காலை 7 மணி அளவில் வழங்கப்படுகிறது.
இன்று சூடான, சுவையான, முசுமுசுக்கை மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற CC வங்கி மேலாளரும், உழவாரப் பணியின் ஸ்தாபகருமான திரு ஆடலரசு ஐயா அவர்களின் திருக்கரங்களால் தினசரி மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.
தீபத்தின் அனைத்து அறப்பணிகளுக்கும், அன்னதானப்பணிகளுக்கும், தொடர் கருணைமாநிதி வழங்கி நல்லாதரவு தரும் தீபத்தின் 154 தொடர் நிரந்தர மாதாந்திர நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.
🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில் … 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635