தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற, 2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, 3) CSR சான்று பெற்ற, 4) தமிழ்நாடு அரசின் “சிறந்த அறக்கட்டளை” என்ற தமிழ்நாடு முதல்வரின் விருதையும், 5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம்.

திருவருள் அருள் வல்லபத்தால், தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சமுதாயப் பணிகள் / மனித நேய பணிகள் / ஜீவ காருண்ய பணிகள் / மக்கள் நலப்பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
💥💥💥💥💥💥💥💥💥💥
குருவருள், திருவருள் மற்றும் நன்கொடையாளர்களின் தொடர் உபயத்தினால், கைங்கரியத்தால், பேருதவியால், நாள்தோறும் தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் 2000 அன்பர்களுக்கு மேல் தொடர் பசியாற்றி வித்தல் செய்கிறது. தினசரி தாகம் தணிக்க ஆங்காங்கு பந்தல் அமைத்து கோடைகால நீர்மோர் வழங்குகிறது.

தினசரி மக்கள் பசி போக்கும் (தினசரி தொடர் அன்னதானம் – மாற்று திறனாளிகளுக்கு, முதியோர்களுக்கு, குழந்தைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, மன நலம் பாதித்தவர்களுக்கு) மட்டுமல்லாது மற்ற சமுதாய பணிகள்:

a) ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல்
– இதுவரை 1347ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில (டிகிரி, டிப்ளமோ, என்ஜினியரிங், மருத்துவம்) ரூபாய் 80 லட்சம் இலவச கல்வி உதவி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.

b) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தல்
– மாதந்தோறும் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட 8 வறுமை நிலையில் வாடுபவர்களுக்கு மருத்துவ உதவியாக தலா ரூபாய் 5,000 வீதம் மாதந்தோறும் ₹40,000 காசோலையாக நேரில் வழங்கப்படுகிறது.

c) ஏழை எளியவர்களுக்கு பழைய ஆடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்குதல்.

d) பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் (அரிசி மளிகை பொருட்கள்) வழங்குதல்

e) மாதந்தோறும் பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல்
– தொடர்ந்து 138 மாதங்களாக (13 ஆண்டுகளாக…) அன்னதான திருத்தொண்டு.

f) மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு மாதந்தோறும் அவர்கள் குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி – அரிசி மளிகைப் பொருட்கள் வழங்குதல்
– 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நேரில் பிரார்த்தனையுடன் வழங்கப்படுகிறது.

g) ரயிலில் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல்

h) வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நித்ய தருமச்சாலையில் கூட்டு வழிபாடு
– தற்போது 501 வாரங்களாக அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, பிரசாதம், தொடர் பசியாற்றுவித்தல்.

i) கோடை காலங்களில் தாகம் தணிக்க தொடர்ந்து நீர்மோர் வழங்குதல்

j) சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் முதியோர் இல்லங்கள் குழந்தைகள் காப்பகங்களுக்கு உதவி செய்தல் மற்றும் அன்னமிடல்

k) சாலையோரம் ஆதரவற்று வாழும் மக்களுக்கு (நடைபாதைகளில், மர நிழலில், பாலங்களுக்கு அடியில், ரயில்வே படிக்கட்டுகளில் வசிப்பவர்கள்) டாடா ஏஸ் வாகனம் மூலம் நடமாடும் தர்மசாலையாக உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டல்களும் நேரில் தேடிச்சென்று வழங்குதல்.

l) இரவில் குளிரில் பஸ் நிறுத்தங்களில், பாலங்களுக்கு அடியில், நடைபாதைகளில் ஆதரவற்று வாழும் மக்களுக்கு இரவில் போர்வைகள் வழங்குதல்.

m ) பேரிடர் காலங்களில் (சுனாமி, வெள்ளம், கொரோனா) நேரில் சென்று தொண்டு செய்தல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்குதல்.

n) சமுதாய பணிகளை விரிவாக்கம் பொருட்டு, திருவண்ணாமலை அருகில் (செஞ்சி), தேவதானாம்பேட்டை கிராமத்தில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில், ஜோதி மாமலையில், 5 ஏக்கரில் – கிராம சேவை (முதியோர் இல்லம், மூலிகை பண்ணை, கோசாலை, அடர் வனம், தருமச்சாலை, தவச்சாலை, அமைத்தல்) போன்ற ஆரம்ப உட்கட்ட அமைப்பு பணிகளுக்கள் நடைப்பெற்று வருகின்றன. திட்ட மொத்த மதிப்பீடு: ₹90 லட்சம்.
தயா உள்ளம் கொண்ட தயாளர்களின் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

o) மற்றும் பல்வேறு சமுதாய நலப் பணிகள் தினந்தோறும், மாதந்தோறும், வாரம்தோறும், வருடம் தோறும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

தகைசால் தயவுடன் கூடிய மனித தெய்வங்கள், இனிவரும் காலங்களில் தீபம் செய்து வருகின்ற தொடர் சமுதாயப் பணிகளில், கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற, தொய்வு விழாமல் தாங்க நினைப்பவர்கள், உதவி கரம் நீட்ட விரும்புபவர்கள், நன்கொடை வழங்க நாட்டம் உள்ளவர்கள், மாதாந்திர நன்கொடை வழங்க எண்ணம் கொண்டவர்கள், தொடர் தர்மம் செய்ய விருப்பமுள்ளவர்கள், புண்ணியத்தில் பாகம் செய்ய விழைபவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அலுவலகத்தில் பேச: 044 4335 82329o
Gpay மூலம் நன்கொடைகள் வழங்க: 9444073635

அறக்கட்டளையின் அறப்பணிகளை பார்வையிட:
www.deepamtrust.org

Leave A Comment