மெய்யூர் கிராம சேவை
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
குருவருளாலும் திருவருளாலும், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை தினசரி இரண்டு வேளை உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே.
இரண்டு வேளை உணவு வழங்க, உணவு சமைத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் வாழும் மக்களுக்கு தினசரி உணவு வழங்க திரு D ஜெயகாந்தன் அவர்கள் இரண்டு சக்கர வாகனம் வழங்கி உபயம் செய்துள்ளார். மெய்யூர் கிராமத்திற்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது.
மேலும் மெய்யூர் கிராம ஏழை குடும்பங்கள் பசியாற அரிசி சிப்பங்கள் நேரில் சென்று வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வழங்கப்படுகிறது.
மெய்யூர் கிராம ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்திய பழைய ஆடைகள் வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் அரிசி வழங்கிய வானகரம் S V குளோபல் பள்ளி நிர்வாகிகள் திரு ராஜிவ் மற்றும் திருமதி மோஷ்மி அவர்களை தீபம் பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி – திருவருட்பிரகாச வள்ளலார்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இதோ மெய்யூர் கிராம சேவைக்காக திரு G வினோத்குமார் ஐயா அவர்கள் உபயம் செய்த தீபம் அறக்கட்டளையின் புதிய டாட்டா ஏஸ் வாகனம், தினசரி உணவு வழங்க இரு சக்கர வாகனம், அரிசி சிப்பங்கள், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் மற்றும் பழைய ஆடைகளுடன் புறப்படுகிறது.
தொடர் நன்கொடைகள் வழங்கி, பொருட்கள் வழங்கி, நான்கு சக்கர இரண்டு சக்கர வாகனங்கள் உபயம் செய்து, தொடர்ந்து நகர்ப்புற சேவை கிராமப்புற சேவை செய்யும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை தீபம் அறக்கட்டளை பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏வாழ்த்துக்களுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
– ஓர் அரசு பதிவு பெற்ற 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்