அன்னதான தொண்டு செய்வோம் !!!
ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தொடர் மழையிலும்… கன மழையிலும்… மக்கள் பசிப்போக்கும் பணி தடைப்படாமல் நடைபெறும்…
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
மக்கள் பசி போக்கும் நித்ய தீப தர்மச்சாலைக்கு விடுமுறையும் இல்லை … ஓய்வும் இல்லை… நாள் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் பசியாற பாத்திர சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது…
☔🌈☔🌈☔🌈☔🌈☔🌈
திருவருட்பிரகாச வள்ளலார் வகுத்த சன்மார்க்க பாதையில்
சென்னை வேளச்சேரி
நித்ய தீப தர்ம சாலையில்
மக்கள் பசியாற
தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார வாழையிலையில் உணவு வழங்கப்படுகிறது.
💥💥💥💥💥💥💥💥💥💥
24 x 7 x 365
வருடம் முழுவதும் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், தினசரி நாள் முழுவதும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தருமச்சாலையில், மக்கள் பசிப்போக்கும் சமுதாயப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
🌟✨🌟✨🌟✨🌟✨🌟✨
1) விடியற்காலை மூலிகை கஞ்சி காய்ச்சுதல்,
2) அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் கஞ்சி கொண்டு செல்லுதல்
3) கூலி தொழிலாளிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் காலையில் கஞ்சி வழங்குதல்,
4) தர்மச்சாலையில் மூலிகை கஞ்சி வழங்குதல்
5) காய்கறி கொண்டு வருதல்
6) காய்கறி சுத்தம் செய்தல்,
7) காய்கறி வெட்டுதல்,
8) காலையில் சமையல் செய்த பாத்திரங்களை சுத்தம் செய்தல்
9) தர்மச்சாலை ஞான சபை சுத்தம் செய்தல்
10) மதிய உணவு இரவு உணவு சமையல் செய்ய உதவுதல்,
11) மக்களுக்கு வழங்க வாழை பழங்கள் கொண்டு வருதல்,
12) மோருக்கு தயிர் வாங்கி வருதல்,
13) அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் உணவு கொண்டு செல்லுதல்
14) தர்மச்சாலையில் வாழை இலையில் மதிய உணவு பரிமாறுதல்,
14) மக்கள் பசியாறிய பிறகு ஒவ்வொரு பந்தியிலும் இலை எடுத்தல், டேபிள் சுத்தம் செய்தல்.
15) மதியம் சமையல் செய்த ஏராளமான பாத்திரங்களை சுத்தம் செய்தல்
16) அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உணவு தயார் செய்தல், பாக் செய்தல், டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் கொண்டு போய் வழங்குதல்,
17) சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு பொட்டலங்கள் வழங்குதல்
18) வாரந்தோறும் குருவாரத்தில் அகவல் பாராயணம்
19) மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம்
20) மாதந்தோறும் முதல் வார சனிக்கிழமையில் சன்மார்க்க சொற்பொழிவு
21) மாதந்தோறும் வடலூர் சத்திய தர்மச்சாலையில் மாத பூச அன்னதான தொண்டு
22) மாதந்தோறும் பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்க 80 கவர்களில் தனி தனியாக பேக் செய்தல்
23) முற்சுடர்களை தினசரி மூன்று முறை தேங்காய் எண்ணெய் ஊற்றி சரி செய்தல்
24) நன்கொடையாளர்களை வரவேற்று உபசரித்தல்
25) அன்றாட தீபம் அலுவலக பணிகள்
26) தினசரி இரவு உணவு வாழையிலேயே வழங்குதல்
27) உணவு வழங்கிய பாத்திரங்களை இரவில் சுத்தம் செய்தல்.
28) பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி மக்கள் பசி போக்கும் பணி…
29) பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகள்…
30) ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில இலவச கல்வி உதவி…
31) மார்கழி மாத குளிரில் சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு நள்ளிரவில் நேரில் சென்று போர்வைகள் வழங்குதல்
32) தீபாவளி திருநாளில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் ஆதரவற்ற இல்லங்களுக்கு தீபாவளி புத்தாடைகளும் இனிப்புகளும் காரமும் வழங்குதல்… சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்குதல்…
போன்ற தெய்வீக மனிதநேய சமுதாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அல்லது விடுமுறை நாட்களில் பகுதி நேர, முழு நேர தொண்டு செய்ய வருக வருக என்று தீபம் அழைத்து மகிழ்கிறது.
தினசரி மக்கள் பசி போக்க தங்களின் பிறந்தநாள் திருமணநாள் மற்றும் விசேஷ நாட்களில் நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் புண்ணியத்தில் பங்குகொண்டு ஆன்ம லாபம் பெற அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொண்டு செய்வோம் !
நீண்டு வாழ்வோம் !
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தயவுடன்…
என்றென்றும் ஆன்ம நேய அறப்பணியில் … 28 ஆண்டுகளாக…
நித்ய தீப தருமச்சாலை
7/8 தருமச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை
9444073635
🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை
1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற,
2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட,
3) CSR சான்று பெற்ற,
4) தமிழ்நாடு அரசின் முதல்வரின் விருதையும்,
5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம்.