* கிராம சேவை: கிராமத்தில் கணவனை இழந்த பெண்மணிக்கு வாழ்வாதார உதவி - "கோ தானம்"* 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄 சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய பணிகளில் ஒன்றான, பசு தானம் - இன்று காலை (7.3.22) ஜீவா நகர் கிராம பெண்மணிக்கு *கிராம சேவையாக* வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மானாம்பதி அருகில், ஜீவா நகர் *கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சார்ந்த கணவனை இழந்த பெண்மணி திருமதி K சாந்தி* அவர்களுக்கு இன்று பசு தானம் வழங்கி, இறையருளால் அவர்களின் தினசரி வாழ்வாதாரத்திற்கு வகை செய்யப்பட்டுள்ளது. திருமதி K சாந்தி அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் மகளும் இருக்கிறார்கள். திருமதி சாந்தி அவர்களுடைய கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டார். இன்று காலை (7.3.22) சோம வாரத்தில், திருமதி K சாந்தி அவர்களுக்கு, தினசரி 7 முதல் 8 லிட்டர் பால் கறக்க கூடிய *ஆவும் கன்றும்* தானமாக வழங்கப்பட்டது. (கோதானம் வழங்கப்பட்ட படத்தை இணைத்துள்ளோம்). கோ தானம் - அதற்கான உபயம் ₹42,000/- வழங்கி *திரு ரவி ஐயா,* ஒரு கிராம பெண்மணியின் குடும்பத்திற்கு வாழ்வு கொடுத்திருக்கிறார். தீபத்தின் வேண்டுகோளை ஏற்று, ₹42,000/- தர்மம் செய்த ரவி ஐயா அவர்களையும், அவருடைய அன்பு குடும்பத்தையும் தீபம் பாராட்டுகிறது! வாழ்த்துகிறது! நன்றி தெரிவிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நன்மைகளும் செய்வாராக! இந்த பசுவானது காஞ்சிபுரம் அருகில் கிராமத்திலிருந்து வாகனம் மூலம் திருக்கழுகுன்றம் மானாமதி அருகிலுள்ள ஜீவா நகருக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. தீபத்தின் அன்னதான பணிகளுக்கும், அனைத்து அறப்பணிகளுக்கும், குறிப்பறிந்து, மனமுவந்து, தீபம் அறக்கட்டளைக்கு வாரி வழங்கும் நன்கொடையாளர்களை இத்தருணத்தில் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️ *தர்மம் செய்வோம்!* *தயவுடன் வாழ்வோம்.* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுடன்... என்றென்றும் சன்மார்க்க ஆன்ம நேய பணியில்... *தீபம் அறக்கட்டளை* வேளச்சேரி சென்னை 9444073635

07
Mar, 22