சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
💐💐💐💐💐💐💐💐💐
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on Road; Meals on Wheels) வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், சுரங்க பாதைகளில், பஸ் நிறுத்தங்களில், மர நிழல்களில், நடைபாதைகளில் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு (முதியவர்கள், தாய்மார்கள், மாற்று திறனாளிகள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்) உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும்,
வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கும் சமுதாயப்பணி… தயவு பணி…தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நடமாடும் தருமச்சாலை மூலம் உணவு வழங்கும் ஒரு சிறு பகுதி காணொளியை இணைத்துள்ளோம்.
தொடர்ந்து மக்கள் பசி போக்க தர்மம் செய்யும் 150 தீபம் மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களையும், ஓயாமல் தொடர் தொண்டு செய்யும் தீபம் சேவடிகளையும், தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.
தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம் !!!
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தகைசால் தயவுடன் கூடிய மனித தெய்வங்கள், இனிவரும் காலங்களில் தீபம் செய்து வருகின்ற தொடர் சமுதாயப் பணிகளில், தொய்வு விழாமல் தாங்க நினைப்பவர்கள், உதவி கரம் நீட்ட விரும்புபவர்கள், நன்கொடை வழங்க நாட்டம் உள்ளவர்கள், மாதாந்திர நன்கொடை வழங்க எண்ணம் கொண்டவர்கள், தொடர் தர்மம் செய்ய விருப்பமுள்ளவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.💥💥💥💥💥💥💥💥💥💥
சாலையோர மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் தண்ணீர் பாட்டலுடன் உணவு வழங்க 1 நாள் உபயம்: ₹6,000/-.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் …
என்றென்றும் ஆன்ம நேய
சமுதாய சிறு பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
– ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரிவிலக்களிக்கப்பட்ட, CSR பதிவுபெற்ற, தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் விருது பெற்ற ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்.