மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி இருவேளை உணவு…
🍚🍚🍚🍚🍚
இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் குடிசைகளுக்கு தேடிச்சென்று தினசரி இரு வேளை உணவு வழங்கும் சமுதாய பணியை இறை பணியாக பாவித்து பல்வேறு இன்னல்களுக்கிடையே தொடர்ந்து தீபம் அறக்கட்டளை செய்து வருகிறது.
இங்கு வறிய நிலையில் வாழும் குழந்தைகளுக்கு (படம் பார்க்கவும்) சத்தான, சூடான, சுவையான, ஆரோக்கியமான உணவு தீபம் அறக்கட்டளை தினசரி வழங்குகிறது. இது இறைவனின் திரு செயல் என்ற ஒரு பெரும் நோக்கத்தோடும், காட்டுப் பகுதியை ஒட்டி வாழும் குழந்தைகளுக்கு தீபத்தின் இந்த ஜீவகாருண்ய பணி தினந்தோறும் நடைபெறுகிறது.
💐💐💐💐💐
தினசரி அன்னதான திருப்பணி தடைபடாமல் நடைபெற தொடர் மாதாந்திர நன்கொடைகள் வழங்கி நல்லாதரவு தரும் 147 நல்லுள்ளங்களை இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். பாதம் பணிந்து வணங்குகிறோம்.
மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பிஞ்சு குழந்தைகள் தினசரி பசியாற ஈர நெஞ்சினர் விரும்பி வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு உணவு வழங்க:₹5000/- (மாதம் ஒன்றுக்கு: ₹1.5 லட்சம்)
🍁🍁🍁🍁🍁
வாழ்க தர்மம் !
வளர்க தர்மம்!
தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம் !
🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635