மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் வாழக்கூடிய 100 குழந்தைகளுக்கு நேற்று நேரில் சென்று தீபாவளி புத்தாடைகளும்… தீபாவளி இனிப்புகளும் காரம், குழந்தைகளுக்கு பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்கள் அனைவருக்கும் உணவு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று வழங்கப்பட்டது.
தீபாவளி புத்தாடைகளுக்கு நன்கொடைகள் வழங்கிய வள்ளல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
தீபாவளி இனிப்புகள் (5000 லட்டுகள்) மற்றும் காரம் தயார் செய்ய நிதியாக பொருட்களாக நன்கொடை வழங்கிய 12 நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. குழந்தைகளின் புத்தாடைகளை ஜெயச்சந்திரா டெக்ஸ்டைல்சில் 7 மணி நேரம் தேர்வு செய்த 4 தீபம் சேவடிகளுக்கு மனமார்ந்த நன்றி.
தீபாவளி இனிப்புகள் இரவு 11 மணி வரை தயார் செய்த 21 சேவடிகளுக்கு நன்றி.
மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு 150 பிஸ்கட் பாக்கெட்டுகள் நேரில் வந்து கொடுத்த அண்ணா நகர் திரு N கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி.
நேற்று நாள் முழுவதும் கிராம சேவைக்காக தொண்டு செய்த தீபத்தின் 5 திருத்தொண்டர்களுக்கு நன்றி.
எல்லாம் வல்ல இறைவனுடைய பேரருள் பெரும் கருணை அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
கிராம சேவையின் நிகழ்வை சிறு காணொளியாக இணைத்துள்ளோம் கண்டு மகிழுங்கள்.
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635