மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு

  • Home
  • MEIYUR
  • மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு

மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு
🪔💥🪔💥🪔💥🪔💥🪔💥🪔
திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய “ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு” என்பதை முழு மூச்சாக கொண்டு, மக்கள் பசிப்போக்கும் பணி மட்டுமல்லாது தீபம் அறக்கட்டளை தொடர்ந்து கிராம சேவையும் செய்து வருகிறது.

நேற்று மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று 18 தீபத்தின் சேவடிகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று நாள் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சமுதாயப் பணியை தீபம் செய்துள்ளது.
🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡
🌻50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது.

🌻50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக 10 கிலோ முதல் தர அரிசியும், 13 வகையான மளிகை பொருட்களும் பிரார்த்தனையுடன் நேரில் வழங்கப்பட்டன.

🌻மேலும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு போர்வைகளும் புடவைகளும் வழங்கப்பட்டன.

🌻அனைவருக்கும் அன்பான சுவையான உணவு வழங்கப்பட்டது.
🌟🪔🌟🪔🌟🪔🌟🪔🌟🪔🌟🪔
மெய்யூர் கிராம சேவைக்காக நிதியாகவும் பொருளாகவும் சேவையாகவும் உதவிய
🙏திரு V பவானி சங்கர் ஐயா
🙏திருமதி உமாதேவி ஸ்ரீபதி அம்மையார்
🙏திருமதி B பத்மாவதி அம்மையார்
🙏திருமதி ஜோதி அம்மையார் ஆகியோரை தீபம் அறக்கட்டளை வாழ்த்துகிறது வணங்குகிறது.

மெய்யூர் கிராம சேவையில் முழுமையாக கலந்து கொண்ட தீபத்தின் 18 சேவடிகளையும் தீபம் அறக்கட்டளை மனம் மொழி மெய்யால் வாழ்த்துகிறது.

தீபம் தர்மச்சாலைகளில் தொடர்ந்து அடுப்பெரிய, தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பசி போக்க மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் 1254 மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களை பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம். பாதம் பணிந்து போற்றுகின்றோம்.
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾
தொண்டு செய்வோம்.
நீண்டு வாழ்வோம்.

தர்மம் செய்வோம்.
தயவுடன் வாழ்வோம்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
தயவுடன்…
என்றென்றும்… கிராம சேவையில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment