ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25
கிராம சேவையாக செஞ்சி வட்டம் தேவதானம்பேட்டை நமது ஜோதி மாமலையில் பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் புதிய தர்மசாலை துவக்க உள்ளோம். நமது ஜோதி மாமலையில் உணவு தயாரிக்கப்பட்டு, இனிப்புடன் செஞ்சி மருத்துவமனை கிராமத்தில் நமது புதிய டாட்டா ஏஸ் வாகனத்தில் வழங்க இருக்கிறோம். பிப்ரவரி 16 முதல் செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு வழங்கும் அன்னதான திருப்பணி நமது ஜோதி மாமலை தர்மச்சாலையில் தொடர்ந்து நடைபெறும்.
மேலும் அப்பல்லோ மருத்துவ முகாமில் கண் சிகிச்சை மருத்துவம் பெற்ற 60 பேருக்கு பிப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை இலவசமாக கண் கண்ணாடிகள் தேவதானம் பேட்டை ஞான மையத்தில் வழங்கப்படும்.
அதன் பொருட்டு பாடி கட்டப்பட்ட புதிய டாட்டா ஏஸ் வாகனம் நாளை காலை புதிய சமையல் பாத்திரங்களுடன் அரிசி மளிகை பொருட்களுடன் நமது சென்னை வேளச்சேரி தர்மச்சாலையில் இருந்து ஜோதிமாமலை புறப்படுகிறது.
இன்று மாலை ஜோதி மாமலைக்கு வாகனம் புறப்படுகிறது. தீபம் நிர்வாகிகள், தீபம் திரு தொண்டர்கள், தீபம் நன்கொடையாளர்கள், புதிய தர்மசாலை துவக்க விழாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறோம்.
ஜோதி மாமலை வர விருப்பமுள்ளவர்கள் தீபம் அறக்கட்டளைக்கு முன்கூட்டியே இன்று மதியம் 2 மணிக்குள் தெரிவிக்கவும்.
💐🟡💐🟡💐🟡💐🟡💐🟡💐
வரவேற்று மகிழும்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635