ஜோதி மாமலை – கிராம சேவை

ஜோதி மாமலை – கிராம சேவை
💐💐💐💐💐💐💐💐💐💐💐
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை விரிவாக்கம் பொருட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதானம்பேட்டை கிராமத்தில், ஜோதி மாமலையில், இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில், நல்லோர்களின் பேருதவியால் 5 ஏக்கர் பூமி தானம் பெற்று, சுமார் 26 லட்சம் பொருட் செலவில் நீர்வளம் நிறைந்த அற்புதமான வட்டக் கிணற்றை ஆண்டவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மேலும் வள்ளலார் ஆதரவற்றோர் கருணை இல்லம் அமைத்து, கீழ்வரும் பல்வேறு கிராம சேவைகள் நடைபெற உள்ளன:
ஜோதிமாமலையை சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் “கிராம சேவையாக”,
முதியோர் இல்லம் அமைத்தல்,
மூலிகைச்சோலை அமைத்தல்,
கிராம மக்கள் பசிபோக்க காய்கறி தோட்டம் அமைத்தல்,
பூந்தோட்டம் அமைத்தல்,
அடர் வனம் அமைத்தல்,
தருமச்சாலை அமைத்தல்,
யோக சாலை பாடசாலை அமைத்தல்,
சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துதல்,
கிராம ஏரி குளங்களை நீர்வளம் பெருக பராமரித்தல்,
கிராம மாணவர்களுக்கு உயர் கல்வி பயில இலவச கல்வி உதவி வழங்குதல் போன்ற சமுதாயப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

தீபம் நன்கொடையாளர்கள், குடும்பத்துடன் மலையடிவாரத்தில் தங்கி சஞ்சீவி மூலிகை காற்றை சுவாசித்து, இயற்கை எழில் சூழ்ந்த வகையில் குடில்கள் அமைத்தல்,
வள்ளலார் வழிபாட்டு ஸ்தலம் அமைத்தல்,
மலையடிவாரத்தில் யோகா மற்றும் தியான மையம் அமைத்தல்,
கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுவாழ்வு அமைய பயிற்சி / வாழ்வாதார உதவியாக பசு வழங்குதல்,
கோசாலை அமைத்து 5 வயதுக்குட்பட்ட கிராம குழந்தைகளுக்கு கறந்த பால் தினசரி வழங்குதல்
போன்ற மேலும் பல சமுதாய பணிகள்…. நடைபெற உள்ளன.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
நமது ஜோதி மாமலையின் நாற்புர எல்லைகள் : வடக்கே-மலையும் மலை சார்ந்த, தெற்கே-ஓடையும் ஓடை சார்ந்த, மேற்கே-காடும் காடு சார்ந்த, கிழக்கே-வயலும் வயல் சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம்.

சில நிமிட காணொளியை தங்களின் பார்வைக்காக பாடலுடன் இணைத்துள்ளோம். பார்த்து மகிழுங்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
தேவதானம்பேட்டை கிராமம், கரியமாமலை அடிவார ஜோதி மாமலை பூமியில், குறிப்பாக மரம், செடி, கொடிகள் அல்லது வள்ளலார் அருட்பாவில் குறிப்பிட்ட ஞான மூலிகை அட்டவணையில் கண்டுள்ள மற்றும் உடல் பிணி போக்கும், தடுக்கும் முக்கியமான ஞான மூலிகைகள் – தூதுவளை, வல்லாரை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை, சீந்தில் போன்றவற்றை பயிரிட்டு, பலருக்கும் பயன் அளிக்கும் “மூலிகைச் சோலை” திட்டத்தை செயல்படுத்த மக்கள் பயன்பெற “சன்மார்க்க பண்ணை” அமைத்தல்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்படி உருவாக்கப்பட்ட “மூலிகைச் சோலையை” அங்கு கிராமத்தில் தங்கி சென்று பார்ப்பதற்கும், அங்கு வள்ளலாரின் நிறைவுடன் அமர்ந்து மூலிகைகள் வெளிவிடும் சஞ்சீவி மூலிகை காற்றை சுவாசிக்கவும், தாங்கள் அனைவரும் உரிமை உள்ளவர்கள் ஆவீர்கள் என்பதை அறிவித்து, இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறோம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தங்கள் நல்லாதரவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635

website:
www.deepamtrust.org

Leave A Comment