தீபத்தின் தினசரி கிராம சேவை

  • Home
  • MEIYUR
  • தீபத்தின் தினசரி கிராம சேவை

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமம்.
காப்பு காடுகளை ஒட்டி பழங்குடியின மக்கள் (இருளர் குறவர்) அனைவரும் குடிசைகளில் வாழ்கிறார்கள். அனேக குடிசைகளுக்கு சுவரே இல்லை. மிகவும் ஏழ்மையான கிராமம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில், தீபம் அறக்கட்டளை இந்த கிராம மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

தீபம் அறக்கட்டளை 100 பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறது.

தினசரி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சமுதாயப்பணியை இணைத்துள்ளோம்.

சக ஜீவனுக்கு கொடுக்கும் உணவு இறைவனுக்கே கொடுக்கும் உணவாகும். இறைவன் தங்களுக்கு அனைத்து நன்மைகளும் செய்வாராக!

19.4.22 – இன்று காலை காப்பு காடுகளை ஒட்டியுள்ள மேற்படி 100 கிராம குழந்தைகள் தினசரி பசியார ₹50,000 க்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும், அரிசி சிப்பங்களும், பழைய ஆடைகளும், தீபத்தின் டாடா ஏஸ் வாகனத்தில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் இருந்து நேரில் சென்று வழங்கப்படுகிறது.
Monthly project cost:₹90,000/-.

தீபத்தின் ஆணிவேர் களாக இருந்து அற்புதங்கள் செய்யும் அருளாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி!

உணவு வழங்குபவர்களுக்கு நன்றி!
பயன்படுத்திய ஆடைகள் வழங்கியவர்களுக்கு நன்றி!
தொடர் நிதி வழங்குபவர்களுக்கு நன்றி!
தீபத்தின் தொண்டர்களுக்கு நன்றி!
இறைவனுக்கு நன்றி!
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தொண்டு செய்வோம்! நீண்டு வாழ்வோம்!
🙏🙏🙏
தயவுடன்
தீபம் அறக்கட்டளை
(சமுதாய பணியில் 25ஆம் ஆண்டில்…)

Leave A Comment