SOCIAL ACTIVISTS

65 குடும்பங்களுக்கு அரிசி சிப்பங்கள்

இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற 65 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் வழங்குதல். விருப்பம் உள்ள ஓரிரு நிர்வாகிகள் இன்று மதியம் 1 மணி அளவில் இந்த சமுதாய ஜீவகாருண்ய பணியை நடத்துமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது. மேலும் குரு வாரங்களில், வியாழக்கிழமைகளில் நடைபெறக்கூடிய அகவல் பாராயணம் ஜோதி தரிசன வழிபாட்டிலும் நிர்வாகிகளும் தொண்டர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம். பொதுவாக தீபம் நிர்வாகிகள் கலந்து கொள்வதில்லை.
Read more

ஓர் ஏழை மாணவிக்கு ₹10,000/- கல்வி உதவி

வருடந்தோறும் சமுதாயத்தில் வறுமை நிலையிலுள்ள 100 ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்புக்கு (டிப்ளமா, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம்) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் நல் உள்ளங்களின் பேராதரவுடன் கல்வி உதவி வழங்கி வருகிறது.
Read more

தீபம் அறக்கட்டளை செய்த உபயங்கள்.

மிகவும் சிறப்பு வாய்ந்தது, அழகான ஆவும், கன்றும்... அற்புதமான பேராற்றல், பெருங்கருணை... நிகழ்வுகளை கண்டு மகிழ்கிறோம்... கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகவும் வருத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் அக்குடும்பத்திற்கு கோதானம் செய்த திரு.கந்தசாமி ஐயாவின் சமூகம் வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பிக்கின்றோம்....
Read more

தீபம் அறக் கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள்

1) *வள்ளலார் நாள்காட்டி:* கடந்த 25 வருடங்களாக தீபம் அறக்கட்டளை திருவருட்பிரகாச வள்ளலாரின் தினசரி காலண்டரை பிரிண்ட் செய்து அதை ஒவ்வொரு இல்லங்களிலும் வள்ளல் வாழ்வதாக பாவித்து, நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க சம்மந்திகளுக்கும், இலவசமாக வழங்கி வருகிறோம். 2022 ஆண்டுக்கான வள்ளலார் கேலண்டர் சிவகாசியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரு கேலண்டர் அச்சாக அடக்க விலை ₹41/- மட்டுமே. 1000 கேலண்டர் பிரின்ட் செய்ய ₹41,000/-. 2) *மிகப்பெரிய சாம்பார் டபரா* வடலூர் வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பில் சத்திய தருமச்சாலையில் ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு சாம்பார் தயாரிக்க மிகப்பெரிய டபரா (100 கிலோ அலுமினியம் - இதுவரை தரும சாலை தவிர வேறெங்கும் இவ்வளுவு பெரிய டபராவை அடியேன் பார்த்ததில்லை). சென்னை MA எத்திராஜ் நாயுடு மொத்த கொள்முதல் கடையில் ஆர்டர் செய்து இருக்கிறோம். டபரா மொத்த அடக்க விலை ₹31,000/-. டபராவில் உபயதாரர் பெயர் பொரிக்கப்படும்.
Read more

கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம்.

சோளிங்கர், பாணாவரம் அருகில் மஹேந்திரவாடி கிராமத்தில் 25 வயதில், திருப்பூர் சாலை விபத்தில் கணவனை இழந்த, 2 சிறு குழந்தைகளுக்கு தாயான, இளம்பெண் நிவேதா அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீபம் அறக்கட்டளை, தினசரி 7 லிட்டர் பால் கறக்க கூடிய, பிறந்து 7 நாட்களே ஆன கன்று பசு, தானம் (₹40,000/-) வழங்குகிறது.
Read more

வறுமை கொடியது

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை கடந்த 15 மாதங்களாக கொரோனா கொடும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான, மதிய உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதற்கான மாதாந்திர செலவு₹40,000/-.
Read more

தீபம் அறக்கட்டளையின் 25வது ஆண்டு மலர்

சித்திரை 1 அன்று (14.4.22) சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தீபம் அறக்கட்டளை விழாவில் தீபத்தின் சமுதாய பணிகள் குறித்து 48 பக்கங்கள் கொண்ட வண்ண வடிவில் 25ஆவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. விழாவிற்க்கு வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள் வண்ண பிரசாத பையுடன் ஆண்டு மலர் வழங்கப்பட்டது.
Read more

நெஞ்சார்ந்த நன்றி!

தீபத்தின் கும்பாபிஷேக விழா சிறப்படைய, அருள்நிதி வாரி வழங்கிய அருளாளர்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். தங்களின் நன்கொடைகள் விழாவை திருவிழாவாக... பெருவிழாவாக... மாற்றியது.
Read more

கோடைகால நீர் மோர்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலை ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

கடவுள் இருக்கிறார்.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம்.
Read more