செஞ்சி வட்டம் எங்களது தேவதானம் பேட்டை சொந்த கிராமத்தில் எனதருமை உடன்பிறப்பு மு.அபிராமி தினந்தோறும் மதிய வேளையில் பசித்தவர்களை தேடிச்சென்று தலையில் கூழ் சுமந்து, உணவு வழங்கி வருகிறார்கள்.
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
தீபம் அறக்கட்டளையின் தினசரி அன்னதானப்பணிகளுக்கும், தொடர் அறப்பணிகளுக்கும், நன்கொடைகளை நூறுகளாக, ஆயிரங்களாக, அரிசி சிப்பங்களாக, பருப்பு, எண்ணையாக, காய்கறிகளாக, மாதந்தோறும் தொடர்ந்து தருமச்சாலைக்கு நேரிலோ அல்லது வங்கி பரிமாற்றம் மூலம், பேரருள் பெருங்கருணைபுரியும் மனித வடிவில், மகான்களையும்,
மகான்கள் வடிவில் தெய்வங்களையும்,
தெய்வங்கள் வடிவில் கடவுளையும்,
கடவுள் வடிவில் தங்களையும் காண்கிறோம் - கொடுப்பவராக...பெறுபவராக...
சாலையோரங்களில் ஆதரவற்ற வாழும் மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நடமாடும் தருமச்சாலையாக உணவு பொட்டலங்களை வழங்கிவருகிறது. உணவு பொட்டலங்கள் உடன் தாகம் தணிக்க மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்ட சமுதாய பணி...
திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலையில் வழங்கப்படுகிறது.
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலையில் வழங்கப்படுகிறது.