SOCIAL ACTIVISTS

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 03.06.2022

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மக்கள் பிணி போக்க “கிராம மூலிகை தோட்டம்”

திருவருள் பெருங்கருணையால், சென்னை வேளச்சேரியில் சாலை (நித்ய தீப தருமசாலை) அமைத்து, சபை (ஞானசபை) அமைத்து, தினசரி 3 வேளையும் தொடர் ஜீவகாருண்யப் பணிகளை, அன்னதானப் பணிகளை, அறப்பணிகளை, தீபம் அறக்கட்டளை செய்துகொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே. மேலும் திருவருட்பிரகாச வள்ளலார் போதித்த உபகார சாலைகளில் ஒன்றான மக்களின் பிணிப்போக்கும் வள்ளலார் வைத்தியசாலை விரைவில் அமைக்க திருவுள்ளம் திட்டமிட்டுள்ளது. வைத்ய சாலைக்கு தேவையான இயற்கை மூலிகை தோட்டம் அமைக்கும் பொருட்டு மூலிகை பண்ணை மற்றும் முதியோர் இல்லம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டுள்ளது.
Read more

379 வது வார
அகவல் பாராயணம்

26.5.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வைகாசி 11 தருமச்சாலை துவக்க நாள்

நாளை 25.5.22, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் நடைபெறும் மூன்று வேளை சிறப்பு அன்னதானம் நிகழ்வில், நேரில் கலந்து கொண்டு, அன்னதான தொண்டு செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பெற்று, பல்லாண்டு வாழ, வாழ்வாங்கு வாழ, இன்புற்று வாழ, நீடூடி வாழ தீபம் அழைக்கிறது.
Read more

வைகாசி 11 – அணையா அடுப்பு ஏற்றிய நாள்.

நாளை வைகாசி 11, 25.05.2022(புதன் கிழமை) மக்களின் பசிபோக்கும் அணையா அடுப்பு ஏற்றிய நாளை முன்னிட்டு, நித்ய தீப தருமச்சாலையில் மக்களுக்கு வாழையிலையில் வயிறாற நாள் முழுவதும் சிறப்பு உணவு வழங்கப்படும்.
Read more

மண்டல பூஜை

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் 2022 ஏப்ரல் 15ஆம் தேதி தருமச்சாலை ஞானசபை குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மூன்று வேளையும் ஞானசபையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வரும் 05.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாகப்பட்டினம் மூத்த சன்மார்க்கி திரு S சைவமணி ஐயா அவர்களின் தலைமையில், வடலூர் குருபக்கிரிசாமி அவர்கள் முன்னிலையில் மூன்று கால அகவல் பாராயணமும் (ஒரு லட்சம் முறை அருட்பெருஞ்ஜோதி லக்ஷார்சனை) மண்டல பூஜை நிறைவும், வழிபாடும், ஜோதி தரிசனமும், நாள் முழுவதும் பசியாற்றுவித்தலும் நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில்...
Read more

தினசரி 3 வேளை அன்னதானம்.

தீபம் அறக்கட்டளையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் செய்யும் தொடர் சமுதாய பணியை - தினசரி 3 வேளை அன்னதானம், தினசரி கோடைகால நீர் மோர், 12 கிராம தருமச்சாலைகள் மூலம் மூலிகை கஞ்சி, நடமாடும் தருமச்சாலை, வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு, மாற்று திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவி, 2 ஆண்டுகள் கொரோனா காலத்தில் இடைவிடாத அன்னதானம், தருமச்சாலை மற்றும் ஞானசபை கட்டிட திருப்பணி போன்ற பல்வேறு பணிகளை சமுதாயம் பாராட்டுகிறது, சன்மார்க்கம் பாராட்டுகிறது, தீபம் நன்கொடையாளர்கள் பாராட்டுகிறார்கள். வள்ளலார் பார்க்கிறார். பாராட்டுகிறார்.
Read more

378 வது வார அகவல் பாராயணம்

19.5.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

தேவதானம் பேட்டை

செஞ்சி வட்டம் எங்களது தேவதானம் பேட்டை சொந்த கிராமத்தில் எனதருமை உடன்பிறப்பு மு.அபிராமி தினந்தோறும் மதிய வேளையில் பசித்தவர்களை தேடிச்சென்று தலையில் கூழ் சுமந்து, உணவு வழங்கி வருகிறார்கள்.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more