SOCIAL ACTIVISTS

387 வது வார அகவல் பாராயணம்

21.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

நடமாடும் தருமச்சாலை

0.07.2022-இன்று நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சாலையோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்,
Read more

வடலூர் மாத பூசம்.

வியாழக்கிழமை இரவு(30.06.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி.

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி - 01.07.2022 மாற்று திறனாளிகளை வணங்குகிறோம் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மெய்யூர் – தினசரி கிராம சேவை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சமர்ப்பணம். மெய்யூர் – தினசரி கிராம சேவை திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது. தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி… தினசரி குழந்தைகளின் பசி […]
Read more

190 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு புத்தாடைகள்

மெய்யூர் கிராம பழங்குடியின 150 குழந்தைகளுக்கு நேற்று (12.6.22 ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று புத்தாடைகள் வழங்கப்பட்டது. புத்தாடைகளுடன் குழந்தைகளின் அற்புத காட்சி... புத்தாடைகள் உபயம் செய்த தீபத்தின் நல்லுங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Read more

ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு 13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை:

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, 80G வருமான விலக்குடன், கடந்த 25 ஆண்டுகளாக, தினசரி 2000 மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும், 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
Read more

ஓர் ஏழை மாணவிக்கு ₹20,000/- கல்வி உதவி

வருடந்தோறும் சமுதாயத்தில் வறுமை நிலையிலுள்ள 100 ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்புக்கு (டிப்ளமா, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம்) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் நல் உள்ளங்களின் பேராதரவுடன் கல்வி உதவி வழங்கி வருகிறது. தந்தையை இழந்த மாணவி, உடல் நலம் குன்றிய தாய். மாணவி செல்வி K நந்தினி அவர்கள் மகாலட்சுமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com (CS) பயில ₹20,000 காசோலையாக கல்வி உதவி பிரார்த்தனையுடன் இன்று வழங்கப்பட்டது.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் …இயற்கை வைத்தியம் – 12.6.22 சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் […]
Read more