SOCIAL ACTIVISTS

28.07.2024 – நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு.

நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு…📔📔📔📔📔📔📔📔📔📔28 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மசாலையில் நடைபெறும் 15 ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம் ஐயா அவர்கள் தலைமையில் 90 மாணவ மாணவிகளுக்கு ~ ₹9 லட்சம் கல்வி உதவிகள் காசோலைகளாக நேரில் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளரும் நலம் விரும்பியும், தீப நெறி மாத இதழின் ஆசிரியருமான EID பாரி நிறுவனத்தில் […]
Read more

26.07.2024 – பசி தீர்ப்பது பரம புண்ணியம்

பசி தீர்ப்பது பரம புண்ணியம் 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 27 ஆண்டுகளாக தொடர் மக்கள் சேவை செய்து வருகிறது. குறிப்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வகுத்த சன்மார்க்க பாதையில் ஈர நெஞ்சம் கொண்ட தயவாளர்களின் பேரருள் பெருங்கருணையினால் தினசரி 2000 மக்கள் பசிப்போக்கும் பணியை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக நமது நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், அடையாறு […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு…::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம […]
Read more

மேலும் ஓர் புதிய தருமச்சாலை

சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
Read more

390 வது வார அகவல் பாராயணம்

11.08.2022 - வியாழக்கிழமை, பௌர்ணமி, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
Read more

மாத பூசம்

புதன்கிழமை இரவு(27.07.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more