தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து 24 ஆண்டுகளாக... (அரசு பதிவு செய்யப்பட்டு 14 ஆண்டு காலமாக ...) தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் - மக்கள் பசி போக்கும் சமுதாயப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே. தற்போது தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் ஏறக்குறைய 2000 மக்களின் பசியை தீபம் போக்கி கொண்டிருக்கிறது.
தினமும் வறுமையில் வாடும் மெய்யூர் கிராம பழங்குடி இன ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.