*தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*
மகாபாரதத்தில் கடவுள் கண்ணனே அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் கர்ணனிடம்.