NATURAL CALAMITIES

டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்... தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.
Read more

கஜா புயல் – உணவு தயாராகிக்கொண்டிருக்கின்றன

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் இருந்து நேற்று இரவு சென்ற தீபம் சேவதாரிகள் காலை நாகப்பட்டினம் சென்றடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க முழு வீச்சில் சேவை செய்து கொண்டுள்ளனர்.
Read more

நாகப்பட்டிணத்தில் உணவு வழங்கப்படும் காட்சிகள்…

நாகப்பட்டிணத்தில் உணவு வழங்கப்படும் காட்சிகள்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நிதியாக அளிக்கலாம்.
Read more

21.11.2018 – கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைக்கிறோம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைக்கிறோம். புதன்கிழமை இரவு (21.11.2018) சென்ற தீபம் சேவதாரிகள் நேற்று முழுவதும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அளித்தனர். புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், களத்தில் நின்று சேவை செய்யும் தீபம் நிறுவனர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின்பதிவு, 55 வயதில் அடியேன் இப்படி ஒரு புயல் பாதிப்பை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தானே புயலே nothing. இன்று புயல்பாதித்த பகுதிகளில் சில கிராமங்களை நேரில் கண்டு அதிர்ந்து போனேன். பசிக்காக மக்கள் ஏங்குகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். மற்ற உணர்வின் தாக்கங்களுக்கு தீபம் அனுப்பிய ஓரிரு படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சாட்சி.
Read more

20.11.2018 – டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க, கைகோர்க்க அழைக்கின்றோம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உணவின்றி தவிக்கின்ற, ஆகாரத்தை எதிர்பார்த்து வருந்துகின்ற சகோதர, சகோதரிகளுக்கு நேரடியாக சென்று, கிராமம் கிராமமாக பார்வையிட்டு, அந்தந்த இடங்களிலும், கிராமங்களிலும் ஒரு வார காலம் உணவு தயார் செய்து பசிப்பிணியை போக்கிட, டாடா ஏஸ் வாகனத்தில் மூலம் நடமாடும் அன்னதானம்.
Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை சேவதாரிகள் நேற்று இரவு 2 வாகனங்கள் மூலம் சென்றுள்ளனர்.ஒரு வாரகாலம் தங்கி சேவை செய்ய உள்ளனர்.
Read more

02.12.2018 – கஜா பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் கட்டமாக சென்று தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
Read more

ஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நிவாரண முகாமில் உள்ள குடும்பங்களுக்கு நேற்று இரவு (2.12.17) வழங்கப்பட்ட நிவாரண உதவியின் சில காட்சிகள் ...
Read more

ஒகி புயல் – நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.
Read more