ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!
ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை! சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 15 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹80,60,965/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 15 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது. மேலும் வரும் 2025 – 2026 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் […]