சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
இன்று பசியாற அருள்நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பிரார்த்தனை.
காய்களை பதப்படுத்தி சமையல் செய்த அன்பர்களுக்கு பிரார்த்தனை.
உணவை அன்போடு பரிமாறும் திரு தொண்டர்களுக்கு பிரார்த்தனை.
பசியாற வந்திருக்கக் கூடிய ஆன்ம நேய அன்பர்களுக்கு பிரார்த்தனை.
உலக தர்மச்சாலைகளுக்கு பிரார்த்தனை.
நாளை 25.5.22, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் நடைபெறும் மூன்று வேளை சிறப்பு அன்னதானம் நிகழ்வில், நேரில் கலந்து கொண்டு, அன்னதான தொண்டு செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பெற்று,
பல்லாண்டு வாழ,
வாழ்வாங்கு வாழ,
இன்புற்று வாழ,
நீடூடி வாழ
தீபம் அழைக்கிறது.
நாளை வைகாசி 11, 25.05.2022(புதன் கிழமை) மக்களின் பசிபோக்கும் அணையா அடுப்பு ஏற்றிய நாளை முன்னிட்டு, நித்ய தீப தருமச்சாலையில் மக்களுக்கு வாழையிலையில் வயிறாற நாள் முழுவதும் சிறப்பு உணவு வழங்கப்படும்.
தீபம் அறக்கட்டளையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் செய்யும் தொடர் சமுதாய பணியை - தினசரி 3 வேளை அன்னதானம், தினசரி கோடைகால நீர் மோர், 12 கிராம தருமச்சாலைகள் மூலம் மூலிகை கஞ்சி, நடமாடும் தருமச்சாலை, வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு, மாற்று திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவி, 2 ஆண்டுகள் கொரோனா காலத்தில் இடைவிடாத அன்னதானம், தருமச்சாலை மற்றும் ஞானசபை கட்டிட திருப்பணி போன்ற பல்வேறு பணிகளை சமுதாயம் பாராட்டுகிறது, சன்மார்க்கம் பாராட்டுகிறது, தீபம் நன்கொடையாளர்கள் பாராட்டுகிறார்கள். வள்ளலார் பார்க்கிறார். பாராட்டுகிறார்.
செஞ்சி வட்டம் எங்களது தேவதானம் பேட்டை சொந்த கிராமத்தில் எனதருமை உடன்பிறப்பு மு.அபிராமி தினந்தோறும் மதிய வேளையில் பசித்தவர்களை தேடிச்சென்று தலையில் கூழ் சுமந்து, உணவு வழங்கி வருகிறார்கள்.
தீபம் அறக்கட்டளையின் தினசரி அன்னதானப்பணிகளுக்கும், தொடர் அறப்பணிகளுக்கும், நன்கொடைகளை நூறுகளாக, ஆயிரங்களாக, அரிசி சிப்பங்களாக, பருப்பு, எண்ணையாக, காய்கறிகளாக, மாதந்தோறும் தொடர்ந்து தருமச்சாலைக்கு நேரிலோ அல்லது வங்கி பரிமாற்றம் மூலம், பேரருள் பெருங்கருணைபுரியும் மனித வடிவில், மகான்களையும்,
மகான்கள் வடிவில் தெய்வங்களையும்,
தெய்வங்கள் வடிவில் கடவுளையும்,
கடவுள் வடிவில் தங்களையும் காண்கிறோம் - கொடுப்பவராக...பெறுபவராக...