Blog

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

389 வது வார அகவல் பாராயணம்

389 வது வார அகவல் பாராயணம் 📔📔📔📔📔📔📔📔📔 04.08.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

388 வது வார அகவல் பாராயணம்

28.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, மாத பூச நாளிலே, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
Read more

மாத பூசம்

புதன்கிழமை இரவு(27.07.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

நடமாடும் அன்ன தர்மச்சாலை

24.07.2022-இன்று நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சென்னை சாலையோரம் பசியால் வாடும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், வாழைப் பழங்களையும், புத்தாடைகளையும், டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று வழங்கப்பட்டது.
Read more

நித்ய தீப தர்மச்சாலையில் – தினசரி பிரார்த்தனை.

இன்று பசியாற அருள்நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பிரார்த்தனை. காய்களை பதப்படுத்தி சமையல் செய்த அன்பர்களுக்கு பிரார்த்தனை. உணவை அன்போடு பரிமாறும் திரு தொண்டர்களுக்கு பிரார்த்தனை. பசியாற வந்திருக்கக் கூடிய ஆன்ம நேய அன்பர்களுக்கு பிரார்த்தனை. உலக தர்மச்சாலைகளுக்கு பிரார்த்தனை.
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு

மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.
Read more