Blog

*ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் மருத்துவ உதவி*

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற, ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மருத்துவ உதவி

கொரோனா காலம் முழுவதும் தீபம் அறக்கட்டளைக்கு ஓயாமல் உழைத்த திரு சுதாகர் அவர்கள் உடல் நலம் குன்றி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திரு சுதாகர் அவர்களுக்கு நம்மாலான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்று தீபம் விரும்புகிறது. விருப்பமுள்ளவர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப திரு பரணி அவர்களிடம் மருத்துவ உதவியை வழங்கலாம் அல்லது இக்குழுவில் பதிவு செய்யலாம். மீண்டும் பதிவு செய்கிறோம் திரு சுதாகர் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரும் […]
Read more

*கோடைகால நீர்மோர் பந்தல்*

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு *கோடை கால நீர்மோர் பந்தல் 01-04-2021 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா* தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

“தீபநெறி” சன்மார்க்க மாத இதழ்.

*விலையில்லா விளம்பரமில்லா - "தீபநெறி" சன்மார்க்க மாத இதழ்.* சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மாதந்தோறும் இருபது பக்கங்கள் கொண்ட விலையில்லா விளம்பர மில்லா "தீபநெறி" சன்மார்க்க மாத இதழை கடந்த 12 வருடங்களாக தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்களுக்கும், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும் இலவசமாக தபாலில் மாதந்தோறும் 26 அல்லது 27 தேதிகளில் தபாலில் அனுப்புகிறோம். *மாத / வருட சந்தா இல்லை.* விருப்பமுள்ளவர்கள் அறப்பணிகளுக்கு அன்னதான பணிகளுக்கு நன்கொடைகள் அனுப்பலாம். அச்சிடப்பட்ட *தீப நெறி* […]
Read more

*மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, பஜனை*

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டீஸ்வரர் திருக்கோவிலில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, இசை, பஜனை வருகிற 12-03-2021 வியாழன் இரவு முழுவதும் திரு A மகாதேவன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தீபம் இந்த ஆன்மீகப்பணியை செய்து வருகிறது.
Read more

*மா மனிதரை வணங்குகிறோம்*

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேராற்றல் பெரும் கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு கிராம நித்ய தீப தர்ம சாலைகளின் அன்னதான பணிகளும், அறப்பணிகளும், வாரி வழங்கும் வள்ளல்களாலும், மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் அருளாளர்களின் அற்புத அருட்செயல்களாலும், தர்ம பணிகள் தடைபடாமல் அல்லும் பகலும் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தர்மம் செய்பவர்களுடைய திருப்பாதங்களை, தெய்வீகப் பாதங்களாக எண்ணி, வணங்கி மகிழ்கிறோம்.
Read more

150ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை தொண்டர்களின் 3 நாட்கள் அன்னதான திருத்தொண்டு மற்றும் பேருந்தில் அழைத்துச் சென்று ஜோதி தரிசனம் மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூர், மேட்டுக்குப்பம், நீரோடை புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்ற சன்மார்க்க நிகழ்வு மிகவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.
Read more

சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடைய பேரருள் பெரும் கருணையினால் தீபம் அறக்கட்டளையின் தைப்பூச திருவிழா நித்ய தீப தர்மசாலை வளாகத்தில் நாள் முழுவதும் கீழ்க்காணும் வகையில் இறையருளால் நடைபெற உள்ளது.
Read more

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி

நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்.
Read more

நிவர் புயல் – தொடர்ந்து மூன்று நாட்களாக… மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்... ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு... பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
Read more