Blog

*மார்கழி விடியலின் சிறப்பு!*

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான *“பேகன்”* எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது. மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை *10,000 போர்வைகளை* வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் *தீபம் அறக்கட்டளை.*
Read more

அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு

*அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.* 💥💥💥💥💥💥💥💥💥💥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்திய தருமச்சாலையில் *தினசரி மூன்று வேளையும்* மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது. 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 நித்திய தீப தருமச் சாலையில் நேற்று (16.12.21) மாலை *150 பார்வையற்ற மாற்று திறனாளி குடும்பங்களுக்கு,* அரிசியும் சிப்பங்களும், 12 வகையான மளிகைப் பொருட்களும் வழங் கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் நித்ய தீப […]
Read more

30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 03.12.21 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 30. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

தினசரி சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசி போக்கும் தொடர் சமுதாயப் பணி.

சென்னை கொட்டிவாக்கத்தில் சைவ ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் *திரு முத்துராமலிங்கம்* என்ற 30 வயது இளைஞர், மற்ற ஆன்ம அன்பர்களை போல் தினசரி இரவில் தருமச்சாலையில் சாப்பிட வருகிறார். வயிறார சாப்பிட்டு முடித்த பின், தருமச் சாலையில் உள்ள நித்திய ஜோதியை வணங்கி, வள்ளலார் காலடியில் தன்னுடைய தின வருமானத்திலிருந்து தினமும் ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 நன்கொடையாக வழங்குகிறார்.
Read more

*தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*

மகாபாரதத்தில் கடவுள் கண்ணனே அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் கர்ணனிடம்.
Read more

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்

கொரோனா காலத்தில் மட்டும், கடந்த 18 மாதங்களில் நித்ய தீப தருமச்சாலையில் தினசரி 100 கிலோ அரிசி வீதம் இதுவரை 18 மாதங்களில் 50 டன் அரிசியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களாக ...தர்ம சாலை தேடி வருபவர்களுக்கும், ரோடு ஓரங்களில் ஆதரவற்று வாழ்பவர்களுக்கும், இறை அருளாலும், உயிர் உபகாரம் செய்யும் நல்ல உள்ளங்களால் தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெறும்.
Read more

வள்ளலார் வருவிக்க உற்ற நாள்

*வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !* 05-10-2021 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்கள் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* ஒவ்வொரு ஆண்டும் உலகம் எங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. *உலகில் தோன்றிய ஞானிகள் அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் […]
Read more

தர்மசாலை கட்டிட வளாகத்தில் 21 புதிய ஜன்னல்கள் அமைத்தல்

சென்னை வேளச்சேரி புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள தர்மசாலை கட்டிட திருப்பணிகள் ஏறக்குறைய 3000 சதுரடியில் முடியும் தருவாயில் உள்ளன. தற்போது இன்னர் மற்றும் அவுட்டர் பூச்சு வேலை, எலக்ட்ரிகல், பிளம்பிங், டைல்ஸ் அமைத்தல், பெயிண்டிங், சிற்ப வேலைப்பாடுகள், ஜன்னல் அமைத்தல், காம்பவுண்ட் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஏராளமான நிதியும், கட்டிட பொருட்களும் தேவைப்படுகின்றன. தர்ம சாலை மிகவும் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் அமைய வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் 21 ஜன்னல்கள் அமைத்திருக்கிறோம். ஒரு ஜன்னல் ரூபாய் 8000 வீதம் ரூபாய் 1,56,000 ஜன்னல் அமைக்க நிதி தேவைப்படுகிறது. கொட்டேஷன் இணைத்துள்ளோம். ஜன்னல் உபயம் கிடைக்கும் என்று காத்திருந்தோம். உபயம் கிடைக்கவில்லை. பெயிண்டிங் உபயம் கிடைக்கும் என்று காத்திருந்தோம். உபயம் கிடைக்கவில்லை. *எல்லாம் திருவருட் சம்மதம்.*
Read more

நாளை 44 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி

சிறப்பு அழைப்பாளர்: கொடைவள்ளல் திரு S டெல்லி பாபு ஐயா அவர்கள். தலைமை: பேராசிரியர் M V அருளாளன் ஐயா அவர்கள். பிரார்த்தனை பாடல்: திரு A மகாதேவன் ஐயா அவர்கள். வரவேற்புரை: பேராசிரியர் முத்துக்குமார் ஐயா அவர்கள் சிறப்பு உரை: திருமதி ஜானகி ஜெயசேகர் அம்மையார் அவர்கள் நன்றி உரை: திரு குமரேசன் ஐயா அவர்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐
Read more