Blog

கடவுள் இருக்கிறார்.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம்.
Read more

374 வது வார அகவல் பாராயணம்

21.4.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, இரண்டுவகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெற்றது. அகவல் பாராயணத்தில் கலந்துகொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு நன்றி! தீபம் அறக்கட்டளை 9444073635
Read more

தீபத்தின் தினசரி கிராம சேவை

19.4.22 - இன்று காலை காப்பு காடுகளை ஒட்டியுள்ள மேற்படி 100 கிராம குழந்தைகள் தினசரி பசியார ₹50,000 க்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும், அரிசி சிப்பங்களும், பழைய ஆடைகளும், தீபத்தின் டாடா ஏஸ் வாகனத்தில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் இருந்து நேரில் சென்று வழங்கப்படுகிறது. Monthly project cost:₹90,000/-.
Read more

மனித பிறப்பு !

மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது. பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.
Read more

தீபத்தின் நன்கொடையாளர் களின் கமல திருப்பாதங்களுக்கு வந்தனம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால், பெருங்கருணையினால், தர்ம சாலை திறப்பு விழா மற்றும் ஞானசபை குடமுழுக்கு விழா சன்மார்க்க ஆன்றோர் பெருமக்களால், ஏப்ரல் 10 முதல் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் சீரும் சிறப்புமாக, விமரிசையாக நடைபெற்றது.
Read more

குடமுழுக்கு விழா

இறைவனுடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக சமுதாய பணிகளை, உயிர் உபகாரப் பணிகளை, மனிதநேயப் பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
Read more

சென்னை வேளச்சேரியில் நித்ய தீப தருமச்சாலை திறப்பு விழா மற்றும் ஞானசபை குடமுழுக்கு விழா…

வேளச்சேரியில் நித்ய தீப தருமச்சாலை அமைய பூமிதான நிதி வழங்கிய, ஞானசபை அமைய, கட்டிட திருப்பணி அமைய இதுவரை கருணை மாநிதி வாரி வழங்கிய 200க்கும் மேற்பட்ட தீபத்தின் நன்கொடையாளர்களை வணங்கி மகிழ்கிறோம். ₹25,000 மேலாக கட்டிட நிதி வழங்கியவர்களுக்கு 15.04.22 மகா கும்பாபிஷேக நாள் அன்று 11 மணி அளவில் ஞான சபையில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு செய்யப்படும்.
Read more

மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 01.04.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

371 வது வார *அகவல் பாராயணம் மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் சிலை நிறுவுதல்*

31.3.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more