சித்திரை 1 அன்று (14.4.22) சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தீபம் அறக்கட்டளை விழாவில் தீபத்தின் சமுதாய பணிகள் குறித்து 48 பக்கங்கள் கொண்ட வண்ண வடிவில் 25ஆவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. விழாவிற்க்கு வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள் வண்ண பிரசாத பையுடன் ஆண்டு மலர் வழங்கப்பட்டது.
தொண்டுறார் கைச்சோறு உண்ணேன்
💥💥💥💥💥💥💥💥💥
சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் அன்னதானம் நடைபெறுவதால், கோடைகாலத்தை முன்னிட்டு தினசரி நீர் மோர் வழங்குவதால், ஏராளமான தொடர் அன்னதான பணிகள் உள்ளன (காய் வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலையை/ஞானசபையை சுத்தம் செய்தல்).
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலை ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம்.
21.4.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, இரண்டுவகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெற்றது.
அகவல் பாராயணத்தில் கலந்துகொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
தீபம் அறக்கட்டளை
9444073635
19.4.22 - இன்று காலை காப்பு காடுகளை ஒட்டியுள்ள மேற்படி 100 கிராம குழந்தைகள் தினசரி பசியார ₹50,000 க்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும், அரிசி சிப்பங்களும், பழைய ஆடைகளும், தீபத்தின் டாடா ஏஸ் வாகனத்தில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் இருந்து நேரில் சென்று வழங்கப்படுகிறது.
Monthly project cost:₹90,000/-.
மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது.
பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.