மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 18 ஆண்டுகளாக…

  • Home
  • BEDSHEET TO ROAD SIDE PEOPLE
  • மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 18 ஆண்டுகளாக…

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 18 ஆண்டுகளாக…
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
💐💐💐💐💐💐💐💐💐💐💐
சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்
ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்,
பாலங்களுக்கு மேல்,
பஸ் நிறுத்தங்களில்,
ரயில்வே நிலையங்களில்,
நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு,
மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 18 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான சமுதாய நிகழ்வு நடைபெறுகிறது.

ரோட்டோர ஆதரவற்ற மக்களுக்கு பாக்கு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும்.
ஏழை மக்கள் நள்ளிரவில், அதிகாலையில் பசியோடு உணவு உண்ணும் காட்சி… தெய்வீக காட்சி… ஓர் ஏழைக்குத் தந்த உணவு எனக்கே தந்த உணவாகும் – “கடவுள்”.

தீபம் அறக்கட்டளை இது வரை ஆயிரக்கணக்கான ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் போர்வைகளுக்கு நிதி வழங்கும் அருளாளர்களின்
திருப்பாதங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.

முதல் கட்டமாக ஜனவரி முதல் வாரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் தேடிச் சென்று போர்வைகள் போர்த்தப்படும்.

மேலும் பெறக்கூடிய நிதி உதவியை பொறுத்து, சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து குளிர் காலம் வரை முடியும் வரை நள்ளிரவில் நடைபெறும்.

இந்த புண்ணிய தொண்டில் ஆன்மநேய அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு
ஆன்ம லாபம் அடையுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
திட்டமிடல்:
500 முதல் 1000 போர்வைகள்

👉 சாலையோர மக்களுக்கு
👉 மெய்யூர் கிராம ஏழை குடும்பங்களுக்கு
👉 தேவதானம் பேட்டை கிராமம் ஏழைகளுக்கு
👉 நித்திய தீப தர்ம சாலை ஏழை எளியவர்களுக்கு
👉 வடலூரில் ஏழை எளியவர்களுக்கு

ஒரு போர்வையின் விலை: ₹200 தோராயமாக…
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏
இப்புண்ணிய தொண்டில் பங்குபெற்று ஆன்ம லாபம் பெற,
For Donation thro Bank Transfer:
DEEPAM TRUST
Current A/C No.30265475129
State Bank of India
IIT Madras
IFS:SBIN0001055
Gpay – 9444073635
UPI ID – deepamtrust@sbi
UPI ID – 9444073635@okbizaxis

கடந்த வருட சேவைகளை கீழுள்ள இணைப்புகளில் சென்று காணொளி காட்சிகளாக பார்க்கலாம்…

🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
💐💐💐💐💐💐💐💐💐💐💐
வஸ்திர தானம் ரோக நிவாரணம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தயவுடன் …
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
– அரசு பதிவு பெற்ற, 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட,
தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் கவர்னர் திருகரங்களால் விருது பெற்ற ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்.

Leave A Comment