ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் …தீபத்தின் தொண்டும்

  • Home
  • ANNDHANAM
  • ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் …தீபத்தின் தொண்டும்
ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் ...தீபத்தின் தொண்டும்...)*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*எங்குறு தீமையும் எனைத் தொடரா வகை கங்குலும் பகலும் மெய்காவல்செய் துணையே*
- *அருட்பெருட்ஜோதி ஆண்டவர்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணையாலும், தீபம் அறக் கட்டளையின் நிரந்தர தொடர் நன்கொடையாளர்களின் தயவோடும் நேற்றைய தினம் (16-05-2021) முழு ஊரடங்கு நாளில் சென்னை மாநகர ரோட்டோரங்களில் (வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில்,  கச்சேரி சாலை,  பட்டினப்பாக்கம், சாந்தோம்  ஆகிய பகுதிகளில்) ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், சுரங்க பாதைகளில், பஸ் நிறுத்தங்களில், மர நிழல்களில் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு   பசியால் வாடும்  வறியவர்களை தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனத்தில் பசியாற்றுவிக்கப்பட்ட  (சோறும் நீரும் வழங்கிய) காட்சி...

சிறு காணொளிக் காட்சியை இணைத்துள்ளோம். வீடியோ காட்சியில் கடைசி 30 நொடிகள் மனதை நெகிழ வைத்த ஜீவ காருண்ய திருப்பணி. தங்கள் கண்களில் கண்ணீர் வந்தால் தங்களுக்குள் தெய்வீகம் (தெய்வீக குணங்கள் - அன்பு, கருணை, தயவு, இரக்கம்) நிரம்பியுள்ளது என்று அர்த்தம். தங்களின் திருப்பாதங்களுக்கு அனந்த கோடி வந்தனங்கள்.   
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் ஆன்ம நேய அன்பர்களை 84 ஆயிரம் ஜீவராசிகளும்  கைகூப்பி தொழும்.....*
*திருஅருட்பிரகாசர்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 பசிக்கு தக்கவாறு விரதத்தை அனுசரிப்பவர்களாலும், கொல்லா விரதம் அனுசரிப்பவர்களுக்கும் கடவுள் அருள் பெற வழிவகை செய்யும். பசியாற்றுவிக்க. வாய்ப்பளித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தாமரை மலர்  பாதத்தை போற்றி அகமகிழ்கிறோம். மேலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ  அகவல் பாராயணம் மற்றும் பிரார்த்தனை  செய்விக்கப்பட்டது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்...
சமுதாய சிறு பணியில்...
*தீபம் அறக் கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment