தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு

  • Home
  • ANNDHANAM
  • தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு
*தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு*

நாள் முழுவதும் அற்புதமான தொண்டு செய்த, தீபத்தின் தொண்டு உள்ளங்களை பாராட்டி,
நன்றியை பதிவு செய்து மகிழ்கிறோம். அன்னம் பாலித்தலுக்கு அருட்கொடை வழங்கிய தயவு உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம்.
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
*வடலூரில் தீபத்தின் 94 வது மாத பூச அன்னதான தொடர் தொண்டு.*

வடலூர் சத்திய தருமச்சாலையில் நாளை (20.4.21) மாத பூசத்தை முன்னிட்டு 12 தீபம் சேவடிகள் அன்னதான தொண்டு செய்ய தயாராக இருக்கிறார்கள்.

குரோனா ஊரடங்கு காரணமாக வேன் இன்று மாலை 4 மணிக்கு புறப்படும்.

நாள்: 19.4.21 (திங்கள்)
நேரம்: மாலை 4 மணி

கடந்த 93 மாதங்களாக வடலூர் வள்ளலார் தோற்றுவித்த அணையா அடுப்பில் தொடர்ந்து இரண்டு இரவுகள் பயணம்செய்து நாள் முழுவதும் காய்கறி சுத்தம் செய்தல், காய்கறி நறுக்குதல், உணவு தயாரித்தல், ஜோதி தரிசனம் காண வருபவர்களுக்கு உணவு பரிமாறுதல் போன்ற தெய்வீக பணிகளை செய்யக்கூடிய தீபம் தொடர் தொண்டர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம். 

மாதந்தோறும் வடலூர் சத்திய தருமச்சாலையில் நடைபெறும் அன்னம் பாலித்தல் நிகழ்விற்கு ஒரு மூட்டை கொண்டைக் கடலை (₹5000) வழங்கும் முதுகளத்தூர் திரு K  பழனிச்சாமி அவர்களையும், 10,000 பாக்குதட்டுகளையும் வழங்கும் நந்தினி பில்டர்ஸ் ஸ்தாபகர் திரு N  குமரகுருபரன் அவர்களையும் தீபம் அறக் கட்டளை நன்றி பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டை கண்டு மனம் மகிழ்கிறது. நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
🔥🔥🔥🔥🔥🍚🍚🍚🍚🍚
தொண்டு செய்வோம்! நீண்டு வாழ்வோம்!
💐💐💐💐💐💐💐💐💐💐
நன்றியுடன் ...
சமுதாய சிறுபணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை

Leave A Comment