இன்றைய அன்னதான பணியில் நித்ய தீப தர்ம சாலையிலும் நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம் நல் உள்ளங்களுக்கு நன்றி! 🙏🙏🙏 தொண்டு மற்றும் தர்மத்தை உணர்ந்து ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்பவர்கள் *"பக்குவ ஆத்மாக்கள்."* தொண்டை உணராமல், தர்மம் செய்யாமல், ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்ய இயலாத ஆத்மாக்கள், *"அபக்குவ ஆத்மாக்கள்."* இன்று தீபம் அறக்கட்டளையின் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் ரோடு ஓரங்களில், பாலங்களுக்கு அடியில், மர நிழல்களில், பஸ் நிறுத்தங்களில், ஆதரவற்று வாழும் மாற்று திறனாளிகள், முதியவர்கள், பெரியவர்கள், குழந்தைகளுக்கு உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் தொண்டர்களுக்கு நன்றி. இன்று தொண்டு செய்தவர்கள் : திரு குமரேசன் ஐயா திரு வெங்கடேசன் ஐயா திரு பிரம் மேசன் ஐயா திரு சரவணன் ஐயா திரு ரங்கநாதன் ஐயா. தொண்டு செய்தவர்களின் பெயர்கள் தெய்வீக பெயர்களாகவும், மூவர் பெயரில் *'ஈசன்'* நிறைந்து இருப்பதை உணர்கிறோம். குறிப்பாக *திரு குமரேசன் அவர்கள்* இயலாதவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் தேடிச்சென்று அன்னமிடும் பணி போற்றுதலுக்குரியது. பாராட்டுதலுக்குரியது. ஆதலால் திரு குமரேசன் அவர்களை இன்று முதல் டாட்டா ஏஸ் நடமாடும் தருமச்சாலைக்கு *"நிரந்தர தலைமை பொறுப்பாளராக"* தீபம் அறக் கட்டளை நியமிக்கிறது. மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித சேவை அல்ல ...அதையும் தாண்டி மகேசன் சேவை... புனிதமான சேவை... என்பதை *'பக்குவ ஆத்மாக்கள்'* மட்டுமே உணர முடியும். மீண்டும் ஒருமுறை தீபம் நிர்வாகம் இன்று தொண்டு செய்த அன்பு உள்ளங்களை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது. ஓரிரு படங்களை மட்டுமே அனுப்பியுள்ளோம். ஏனென்றால் *"அபக்குவ ஆத்மாக்களுக்கு"* ஜீவகாருண்ய மேன்மை புரிவதில்லை. புரியவில்லை. *தீபம் நிர்வாகம்*
12
Apr, 21