*தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • *தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*
மானிடராய் பிறத்தல் அரிது...
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது...
கல்வி ஞானம் பெறுதல் அரிது...
தான தர்மம் செய்தல் அரிது... *
*- அவ்வை பிராட்டி*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மகாபாரதத்தில் கடவுள் கண்ணனே அழுத இடம் ஒன்று உண்டு.   அஃது எந்த இடம் தெரியுமா?  கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது.   அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்.   கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் கர்ணனிடம்.  

அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான். இதைக் கேட்ட கடவுள் கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை.   கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.   கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.  கர்ணன் கேட்டதோ *இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்.*   

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான்   "நீ எத்தனை பிறவி எடுத்தாலும், *தானம் செய்து*, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான்.   இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை.   *இறைவனே அவனைத் தேடி வந்தான்.* கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான்.  அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். 
கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான்.   

இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.   அதற்கு என்ன செய்ய வேண்டும்?  *கர்ணன் தானம் செய்தான்,* செய் நன்றி மறவாமல் இருந்தான்.   எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.  உலகளந்த பெருமாள், கண்ணனே கர்ணனிடம் கை நீட்டி நின்றார். கடவுளான கண்ணனின் கை கீழே இருந்தது. தர்மம் செய்த கர்ணனின் கைகள் மேல் நோக்கி இருந்தது. *தர்மம் கடவுளை விட உயர்ந்தது.*
💥💥💥💥💥💥💥💥💥💥
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி *தீபம் அறக்கட்டளை* நித்திய தீப தர்ம சாலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னம் பாலித்தல் என்ற சமுதாயப் பணியை, மக்கள் பணியை, தெய்வீக பணியை, தொடர்ந்து, நல்லுள்ளம் கொண்ட நல்லோர்களாலும், தயவு மேலிட்ட ஆன்றோர்களாலும், சமுதாய நலம் சார்ந்த சான்றோர்களாலும்,  தொடர் மாதாந்திர நன்கொடைகள் வழங்கும் அருளாளர்களாலும், திருவருட்பிரகாச வள்ளலார் காட்டிய சன்மார்க்க பாதையில், ஜீவகாருண்ய பணியாக, தினசரி உணவு வழங்குதல், போர்வைகள் வழங்குதல், பொருள் ஈட்ட முடியாத மாற்று திறனாளிகள் மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல், மருத்துவ உதவி, கொரோனா கால நல உதவி, பேரிடர் கால உதவி போன்ற அறப் பணிகளை செய்து வருகிறது.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
மேலும் சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரி கரை தெருவில் நித்ய தீப தர்மசாலையில் மக்கள் பசியாறும் அன்னதான கூடம், ஞான சபை, வழிபாடு ஸ்தலம், மற்றும் தியான மையம் அமைக்கும் கட்டிட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 50 சதவீத தர்ம சாலை கட்டிட பணிகள் பூர்த்தியாக வேண்டியிருப்பதால்,  நல்லுள்ளம் கொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்கள், தர்ம சாலை கட்டிடம் முழுமையடைய அருள்நிதியாகவோ, கட்டிட பொருட்களாகவோ (செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், ஸ்டீல் கம்பி), அவரவர் சக்திக்கு / விருப்பத்திற்கு ஏற்றார்போல் வழங்கி தர்மர் சாலையின் புண்ணியத்தில் பங்கு பெறுமாறு தீபம் அறக் கட்டளை அன்போடு அழைத்து மகிழ்கிறது.

இதுவரை தருமச்சாலை கட்டிட திருப்பணிக்கு அருள்நிதியாகவும், கட்டிட பொருட்களாகவும் வாரி வழங்கிய *28 நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளர்களை* வணங்கி மகிழ்கிறோம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தாங்கள் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் விசேஷ நாட்களில் பசித்தவர்களுக்கு தர்ம சாலைகள் மூலம் அன்னம் வழங்க விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கி மகிழலாம்.
💐💐💐💐💐💐💐💐💐💐

சமுதாய நற்பணிகளுக்கு, அன்னதான பணிகளுக்கு அறப்பணிகளுக்கு, தருமச்சாலை கட்டிடப் பணிகளுக்கு அறம் சார்ந்த நல்லோரிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*தர்மம் செய்வோம்!* 
*தயவுடன் வாழ்வோம்!*
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
Bank Transfer 

Let Dharma Spread from 
Door to Door; 
Heart to Heart;
Person to Person.

For Donation thro Bank Transfer: 
State Bank of India, 
IIT Madras, 
*Current A/C No.30265475129,* 
DEEPAM Trust, 
IFS:SBIN0001055; 

by cheque i.f.o. DEEPAM  TRUST
No.30, Droupathi Amman Koil Street, Velachery, Chennai 600 042.
🙏🙏🙏
Gpay mobile no - 9444073635
UPI ID - 9444073635@okbizaxis
🙏🙏🙏
After transfer, please send your Donation details such as address, email ID, purpose, date of AD etc.9444073635
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தயவுடன் சமுதாய சிறுபணியில் ...
*தீபம் அறக்கட்டளை*
(Since 1997...)
- A Government Regd. 80G income tax exempted NGO.
வேளச்சேரி சென்னை

www.deepamtrust.org
admin@deepamtrust.org
9444073635

Leave A Comment