செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு 📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔 25.3.25: இன்று சிறப்பு உணவு
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை நிர்வாகத்தின் கீழ் தேவதானம்பேட்டை ஜோதி மாமலை நடமாடும் தர்மசாலை தீபம் அறக்கட்டளை சார்பாக இன்று 25.03.2025தேதி செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு ஏழை எளிய மக்களுக்கு அற்புதமான பிரிஞ்சி சாதம் கத்திரிக்காய் தொக்கு வெங்காயம் பச்சடி மற்றும் இனிப்புடன் சிறப்பு உணவு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் இன்று நேரில் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு உணவை தீபம் தொண்டர் அப்பாஸ் என்கிற ராஜசேகர் அவர்கள் சென்னையில் இருந்து தேவதானம்பேட்டை கிராமம் ஜோதி மாமலைக்கு நேற்று இரவு நேரில் சென்று, இன்று சிறப்பு உணவு தயார் செய்து நேரில் வழங்கினார்.
தொடர் நன்கொடையாளர்கள் வாழ்க! அன்னதான திருத்தொண்டர்கள் வாழ்க! நடமாடும் தர்ம சாலை வாழ்க!அருட்கொடையாளர்கள் வாழ்க தீபத்தின் நல விரும்பிகள் வாழ்க! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 🙏🪷🙏🪷🙏🪷 நன்றியுடன் தீபம் அறக்கட்டளை