ஜோதி மாமலை பயணம் – மருத்துவ முகாம்…
🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥
செஞ்சி தேவதானம்பேட்டை கிராமத்தில் தீபம் அறக்கட்டளையின் தொடர் கிராம சேவையாக, தீபம் அறக்கட்டளை 22.1.25 அன்று அரிமா சங்கம் Ln விஸ்வநாதன் ஐயா மற்றும் Ln ஸ்ரீகுமார் ஐயா அவர்கள் தலைமையில் அப்பல்லோ மருத்துவ முகாம் மற்றும் ஜோதி அருள் அறக்கட்டளை நிறுவன திரு மாதேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் இலவச கணினி பயிற்சி தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவ குழு, நர்சுகள், எக்ஸ்ரே இசிஜி எடுக்கும் அப்போலோ பஸ் சென்னையில் இருந்து தேவதானம் பேட்டை கிராமத்திற்கு வருகிறது.
மேலும் கிராம சேவையாக தேவதானம்பேட்டை கிராமத்தில் இலவச கணினி பயிற்சி 22.1.25 புதனன்று துவக்கப்படுகிறது.
தீபம் நிர்வாகிகள், தீபம் திரு தொண்டர்கள், மற்றும் தீபம் நன்கொடையாளர்கள் அனைவரையும் தீபம் அறக்கட்டளை வருக வருக என்று வரவேற்கிறது.
சீட்டர் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21.1.25 அன்று மதியம் மூன்று மணி அளவில் நமது சென்னை வேளச்சேரி தர்மச்சாலையில் இருந்து வேன் புறப்படுகிறது. இலவச கணினி பயிற்சி துவக்க விழா மற்றும் மருத்துவ முகாம் முடிந்தபின், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோதி மாமலை திட்ட பணிகளை பார்வையிட்ட பிறகு புதன் மாலை சென்னை திரும்புதல்.
நமது ஜோதி மாமலையில் பச்சை வண்ண சேலை உடுத்தி பசுமையாய் காட்சி தரும் இயற்கை காட்சியை காணவும், மருத்துவ முகாமில், இலவச கணினி பயிற்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நாளை இரவு தேவதானம் பேட்டை கிராமத்தில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
💐🎈💐🎈💐🎈💐🎈💐🎈💐
ஜோதிமாமலை நேரில் வர விருப்பமுள்ளவர்கள்
தர்மச்சாலை பொறுப்பாளர் திரு சாமி சங்கரன் பிள்ளை அவர்களை தொடர்பு கொண்டு வருகையை உறுதி செய்து கொள்ளவும்.
திரு சாமி சங்கரன் பிள்ளை அவர்கள் தொடர்பு எண்:
+91 99947 23635
🙏🌟🙏🌟🙏🌟🙏🌟🙏🌟🙏
அழைத்து மகிழும்…
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635