தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!

தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள்,
தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகள்,
தீபத்தின் சேவடிகள், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கு,
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
உலகெங்கும் மக்கள் பசி போக்க தர்மசாலைகள் அமைத்து, ஒரு வேளை, இரண்டு வேளை, மூன்று வேளை என அவரவர் சக்திக்கேற்ப உணவு தந்து, நான் கொடைகள் வழங்கி, தொண்டு செய்து, தர்மப் பாதையில் பயணிக்கும் அனைத்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கும் தீபத்தின் திரு கார்த்திகை தீப இனிய நல்வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐💐💐💐
தன்னில் தான் இருந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்வோம்.

புறத்தில்
மனிதன் உருவாக்கிய சிலையில்…….இறைவன் இல்லை.
புறத்தில் உயிர்களிடத்தே ஜீவனாக இருப்பதாக
பாவிக்கப்படுகிறது……….
உயிருக்குள் இறைவன்
….இருக்கிறார்.
“ஊன் உடம்போர் ஆலயம்; ஜீவன் சிவலிங்கம்…” தேடுவோம்… உணர்வோம்…

நட்ட கல்லை
தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே … சுற்றி வந்து முனுமுனுன்னு
சொல்லும் மந்திரம்
ஏதடா………..
நட்ட கல்லும்
பேசுமோ நாதன் உள் இருக்கையில் – “சித்தர் சிவ வாக்கியர்”

கல்லுக்குள் கடவுள் நம்பிக்கையின் நோக்கம் மனிதனுக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் (உருகி) உணர்ந்து கொள்ளவே
“தெய்வ வழிபாடு”.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து, கடவுளே மனிதனுக்குள் ஜீவனாக இருந்தும் கூட, குறைந்த பட்சம் மனிதனால் சக மனிதனிடம் மனித நேயத்தை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது…
பல சமயங்களில்…
சுயநலத்தால்…
நான் என்ற ஆணவத்தால்…
பணம் பதவி என்ற மோகத்தால்…
இந்த மானுட வாழ்க்கை நிரந்தரமில்லை என்ற ஞானத்தை உணர மறுக்கும் அஞ்ஞானம் என்னும் அறியாமை காரணத்தினால்…

எனவே தான் வள்ளல் பெருமான்…. தயவு … தயவு … தயவு… என்று
மனித மனங்களை கரைய “தயவு வழியை” காட்டினார்கள்.

சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும்
மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே – “தாயுமானவர்”
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கலிகாலத்தில் இறைவனை அடைய ஒரே வழி உள்ளம் உருகி உள் ஒளி விளக்கிட வைக்கும் *”ஜீவகாருண்ய வழிபாடே” அன்றி வேறு ஒன்றும் இல்லை.
💥💥💥💥💥💥💥💥💥💥
ஜீவகாருண்ய ஒழுக்கமே உண்மையான இறைவழிபாடு – “வள்ளல் பெருமான்”
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா ஒழுக்கம் உலகெலாம் ஓங்குக!

அருள் சத்குரு நாதர் தயவோடு…
திருவடியை தன் முடி
மேல் ஏற்றி வணங்கி வாழ்த்தி போற்றி மகிழ்கின்றோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
போற்றனின் பேரருள் போற்றனின் பெரும் சீர் ஆற்றலில் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி
ஆனந்தம்… பரமானந்தம்… பேரானந்தமாக வாழ்வோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
தீபம் பாலா
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Leave A Comment