80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 06.12.2024
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.
06.12.2024 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் (சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, சோம்பு, வெந்தயம், உப்பு, புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்) தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் வழங்கப்படும்.
அனைவருக்கும் தருமசாலையில் வாழை இலையில் வயிறார உணவு வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள அன்பர்களுக்கு பஸ் / ரயில் போக்குவரத்து கட்டணம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்யும் அருளாளர்கள்:
1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை, – 25 குடும்பங்களுக்கு உபயம்
2) திரு அருள் சந்திரன், SGS oil – 3 குடும்பங்களுக்கு உபயம்
3) எக்ஸலண்ட் ஹாஸ்பிடல் வேளச்சேரி – 10 குடும்பங்களுக்கு உபயம்.
4) அரிமா ரஜினி மணவாளன் ஐயா, பள்ளிக்கரணை – 5 குடும்பங்களுக்கு உபயம்
5) திரு A பழனி ஐயா – 3 குடும்பங்களுக்கு உபயம்.
திரு முருகன் அய்யா 4 குடும்பத்திற்கு அரிசி உபயம்
மேலும் ஐவர் தலா ஒரு குடும்பத்திற்கு உபயம்
இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக வழங்கப்படுகிறது.
மாற்று திறனாளிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்கு, பாரி போல் வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி.
Project cost: ₹1,50,000/- p.m.
Sponsors Are Welcome
தீபம் அறக்கட்டளை
(Since 1997… 27ஆம் ஆண்டில்…)
7, தர்மச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை 42.
Gpay 9444073635
இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு, அளிக்கப்பட்ட, தமிழ்நாடு முதல்வர் மற்றும் கவர்னர் திருக்கரங்களால் நேரில் அரசு விருது பெற்ற, ஓர் அறத்தொண்டு நிறுவனம்.