புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல்

புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல்
🙏🙏🙏🙏🙏
நம்முடைய வருமானத்தில், மாதத்தின் “முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்” – பழமொழி. நம் வருமானத்தின், ஒரு பகுதி மாதத்தின் முதல் செலவு தர்மமாக / புண்ணியமாக / நற்செயல்களாக இருக்கட்டும் (புதுமொழி) என்ற தெய்வீக எண்ணத்தில், தீபம் அறக்கட்டளையின் அன்றாட அன்னதானப்பணிகளுக்கும், பல்வேறு அறப்பணிகளுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடைகள் வழங்கும் தீபத்தின் “150 புண்ணியமூர்த்திகளை” வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
தன் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும்; நம்மை உருவாக்கி ஆளாக்கிய இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும்; நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்; மக்கள் பசி போக்க வேண்டும்; ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவு வேண்டும்; பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்ய வேண்டும்; நீடிய பிணியால் வருந்துகின்றோர்க்கு உதவி செய்ய வேண்டும்; ஜோதி மாமலையில் சன்மார்க்க பண்ணை (வள்ளலார் கோட்டம், வள்ளலார் தோட்டம், வள்ளலார் இல்லம்) சிறப்பாக அமைய வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் கொண்ட தீபம் அறக்கட்டளையின் தொடர் மாதாந்திர நன்கொடையாளர்களை மனம், மொழி, மெய்யால் வாழ்த்துகிறோம்.
💐💐💐💐💐
வாழ்க பல்லாண்டு.
வாழ்க நீடூழி.
🌷🌷🌷🌷🌷
புண்ணியம் என்பது ஏதோ அடுத்த ஜென்மத்திற்கும், இறுதியில் இறைவனடி சேர்வதற்கும் மட்டுமே உதவும் விஷயம் அல்ல. இந்த பிறவியிலேயே பல்வேறு சந்தர்பங்களில், சூழ்நிலைகளில், அவை நமக்கும், நம் குடும்பத்தாருக்கும் அரணாக இருந்து, இக்கட்டான தருணங்களிலும் நம்மை காக்கக்கூடியவை. நன்மை தரக்கூடியவை. இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம் வழங்கக் கூடியது ‘தர்மம்’. ஆதலால் தர்மம் தலை காக்கும்…தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று மதங்கள் கூறுகின்றன; மகான்கள் கூறுகிறார்கள்; மறைகள் கூறுகின்றன.

மாதத்தின் முதல் ஓரிரு தினங்களில் தீபம் அறக்கட்டளையின் தொடர் அன்னதானப் பணிகளுக்கும், அற பணிகளுக்கும், நன்கொடைகள் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு (வழங்கிய … வழங்கிக் கொண்டிருக்கும்… வழங்கப்போகும்… மனித தெய்வங்களை) செயலிலும் உத்வேகம் காட்டும் உயிர் உறவுகளை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.
போற்றுகிறோம். பூஜிக்கிறோம். பிராத்திக்கிறோம்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
என்றென்றும் மக்கள் பசிபோக்கும் பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635
– 1997 முதல் … சமுதாயப்பணியில்… 28 ஆண்டுகளாக…

Leave A Comment