தீபம் அறக்கட்டளையின் அன்றாட அறப்பணிகள் – தினசரி திருவிழா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் பசித்து வரக்கூடிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு ஜாதி மத பேதம் இல்லாமல் அன்றாட மூன்று வேளையும் தொடர் அன்னதான திருவிழா… வாழை இலையில்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாட்டா ஏஸ் வாகனத்தில் தினசரி நேரில் சென்று இரண்டு வேளை உணவு வழங்கும் திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தினசரி இரண்டு வேளை சூடான சுவையான சுகாதாரமான அன்பான உணவு திருவிழா.
மேலும் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு உணவு வழங்கும் திருவிழா.
01.12.24: ஞாயிற்றுக்கிழமை ஈரோடு இயற்கை மருத்துவர் திரு மாதேஸ்வரன் அவர்களின் இலவச மாதாந்திர மருத்துவ முகாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.
05.12.24: குருவாரம் வியாழக்கிழமை 511 வது வார அகவல் பாராயணம், கூட்டு பிராத்தனை ஜோதி வழிபாடு சிறப்பு அன்னதான திருவிழா.
06.12.24: வெள்ளிக்கிழமை 80 பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு மாதாந்திர வாழ்வாதார உதவி 10 கிலோ தரமான அரிசியும் 15 வகையான மளிகைப் பொருட்களும்… வழங்கும் சமுதாய திருவிழா.
07.12.24 சனிக்கிழமை நமது வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அரிமா சங்கம் மற்றும் தீபம் அறக்கட்டளை இணைந்து வழங்கும் 10 மருத்துவர்களும் 10 செவிலியர்களும் கொண்ட அப்போலோ மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம். 300 அன்பர்களுக்கு மட்டும்.
07.12.24: சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மூத்த சன்மார்க்கி திரு வேதாச்சலம் ஐயா அவர்களின் சன்மார்க்க சொற்பொழிவு. தொடர்ந்து சிறப்பு அன்னதானம்.
தீபத்தின் அன்றாட அறப்பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி பேராதரவு தரும் நல்லுள்ளங்களை வணங்கி வாழ்த்துகிறோம்.
அருள் இனமே அருள் பெற வாரீர் என அன்போடு அழைத்து மகிழும்…
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
என்றென்றும்… சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635