தர்மம் செய்வதை யார் தடுத்தாலும், தர்மம் செய்வதை நிறுத்தாதீர்கள்.
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢
தர்மம் என்பது கடவுளை விட உயர்ந்த குணம். ஆதலால் மனைவி தர்மம் செய்வதை கணவன் தடுத்தாலும்,
கணவன் தர்மம் செய்வதை மனைவி தடுத்தாலும்,
பெற்றோர்கள் தர்மம் செய்வதை பிள்ளைகள் தடுத்தாலும்,
பிள்ளைகள் தர்மம் செய்வதை பெற்றோர்கள் தடுத்தாலும், தர்மம் செய்வதை ஒருபோதும் கைவிட வேண்டாம். நிறுத்த வேண்டாம். ஏனென்றால் தர்மம் என்பது கடவுள் மனிதனுக்கு வழங்கிய ஓர் அற்புத இறைகுணம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தனியாகவோ அல்லது தனி நபர் மூலமாகவோ அல்லது அறக்கட்டளைகள் மூலமாகவோ, தர்மம் செய்து, உயிர் உபகார பணியை, ஜீவகாருண்ய பணியை தொடரலாம்.
மேலும் தர்மம் செய்வதற்கு முன் தனிநபர் மற்றும் அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வோம்.
இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரு ஜீவனுக்காவது நாம் உதவி செய்யும்படி அமையட்டும். அல்லது உணவு வழங்கி பசி போக்கும் நற்பணியாக அமையட்டும்.
💥💥💥💥💥💥💥💥💥💥
தீபம் அறக்கட்டளையின் அனைத்து தொடர் சமுதாயப் பணிகளிலும் முழு நம்பகத் தன்மையும், ஈடுபாடும், சமுதாய அக்கறையும், தர்மத்தின் மீது தங்களுக்குள்ள பேரவாவையும் போற்றி வணங்குகிறோம்.
தீபம் அறக்கட்டளை ஒருபோதும் பணம், புகழ், பதவி, பெருமை போன்ற படோடப குணங்களை நாடியதில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தீபத்தில் பேச்சு குறைவு; சமுதாயப் பணிகள் அதிகம்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
எல்லாம் வல்ல பேரருள் பெருங்கருணை பிரபஞ்சத்தை தர்மத்தின் மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறது. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
என்றென்றும் நன்கொடையாளர்களின் தயவில்…
கருணை மழையில்…
அன்பில்…
ஆதரவில்…
அரவணைப்பில்…
நன்கொடையில்…
இணைப்பில்…
ஈடுபாட்டில்…
இரக்கத்தில்…
ஈகை குணத்தில்…
ஊக்கத்தில்…
வாழ்த்துக்களில்…
வளர்ச்சியில்…
மலர்ச்சியில்…
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
என்றென்றும் …
மக்கள் நேய அறப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635