தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.

தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.
💥💥💥💥💥💥💥💥💥💥
நாம் ஒவ்வொருவரும் நமது இல்லத்தில் அடுப்பில் உணவு தயாரித்து மூன்று வேளையும் தினசரி பசித்த மக்களுக்கு உணவு வழங்கி புண்ணியம் பெறுவது சற்று கடினமான பணி.
ஆதலால் தொடர்ந்து அன்னதானம் செய்யும் தர்ம சாலைகள் மூலம் ஜீவகாருண்யம் செய்து, உயிர் உபகாரப் பணிகள் செய்து, புண்ணிய பலனை பெற்று நாமும் நம் சந்ததிகளும் வளமோடும் நலமோடும் வாழ இறைவன் இப்பிறவியில் நமக்கு வழி செய்கிறான்.

நீங்கள் கொடுப்பதால், (தர்மம் செய்வதால், நன்கொடை வழங்குவதால்) நாங்கள் சமுதாயத்திற்கு கொடுக்கிறோம்.
இறைவன் கொடுத்ததெல்லாம் கொடுத்தான். ஒருவருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான்.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
நீங்கள் கொடுப்பதால், நாம் தினசரி மூன்று வேளையும் தர்மச்சாலையில் ஜாதி மத பேதமில்லாமல் பசித்து வரக்கூடிய அனைத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கும் வாழை இலையில் வயிறார அன்பான உணவு கொடுக்கிறோம்.

நீங்கள் கொடுப்பதால், தினசரி 15 கிராம தர்மசாலைகளில் 2000 அன்பர்களுக்கு உணவு கொடுக்கிறோம்.

நீங்கள் கொடுப்பதால், 1247 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இதுவரை இலவச கல்வி உதவி தொகை ரூபாய் 80 லட்சம் கொடுத்து இருக்கிறோம். இன்னும் கொடுத்துக்கொண்டு இருப்போம்.

நீங்கள் கொடுப்பதால், 80 பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்கிறோம். இன்னும் கொடுப்போம்.

நீங்கள் கொடுப்பதால், 2 சிறுநீரகமும் செயலிழந்த, பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 8 அன்பர்களுக்கு டயாலிசிஸ் மருத்துவ உதவியாக மாதந்தோறும் தலா Rs.5000 வீதம் Rs 40,000 காசோலையாக வழங்குகிறோம்.

நீங்கள் கொடுப்பதால், கோடை காலத்தில் குளிர்ச்சியான சுகாதாரமான தாகம் தணிக்க தினசரி நீர்மோர் கொடுக்கிறோம்.

நீங்கள் கொடுப்பதால், பேரிடர் காலங்களில் வாழ்வாதார உதவிகள் கொடுக்கிறோம்.

நீங்கள் கொடுப்பதால், வருடம் தோறும் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற இல்லங்களுக்கும், கிராமங்களிலும் சாலையோர ஆதரவற்றவர்களுக்கும் இனிப்பு காரம் மற்றும் தீபாவளி புத்தாடைகள் நேரில் சென்று வழங்குகிறோம்.

நீங்கள் கொடுப்பதால், வடலூர் சத்திய தர்மச்சாலையில் மக்கள் பசியாற வாழை இலை மற்றும் மூக்கடலை கொடுக்கிறோம்.

நீங்கள் கொடுப்பதால், மாதாந்திர இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம்.

நீங்கள் கொடுப்பதால், செஞ்சி தேவதானாம்பேட்டை கிராமத்தில் கரியமாமலை அடிவாரத்தில் ஜோதி மாமலையில் 5 ஏக்கர் விவசாய பூமியை கிராம சேவைக்காக… முதியோர் இல்லத்திற்க்காக… மூலிகை பண்ணைக்காக… கொடுக்கிறோம்.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
நமது தீபம் நன்கொடையாளர்களிடம் உரிமையுடன் விண்ணப்பம்.
தற்போதைய தேவை:
1) மெய்யூர் கிராமத்தில் காட்டுப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு இரண்டு வேளையும் தினசரி உணவு கொண்டு செல்ல பழைய/புதிய இருசக்கர வாகனம்.

2) தீபம் அலுவலகத்திற்கு பழைய/புதிய கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்.

3) மாதாந்திர அரிசி உபயம்

4) மாதாந்திர மளிகை பொருட்கள் உபயம்.

நீங்கள் கொடுப்பது தொடர்வதால், மேற்கண்ட அனைத்து ஜீவகாருண்யப்பணிகளும், மனிதநேய பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் நன்கொடைகள் வழங்கி, பிறந்தநாள் திருமண நாள் கொண்டாடுவதால், நித்ய தீப தர்மச்சாலையில் தினசரி பசித்த மக்களுக்கு உணவு வழங்கி அன்னதான விழா கொண்டாடுகிறோம்.

தீபம் அறக்கட்டளைக்கு போன் அழைப்பு வரும்போது எல்லாம், sms வரும்போதெல்லாம், மக்கள் பசியாற நன்கொடைகள் வராதா சமுதாயப் பணி தொடர்ந்து நடைபெறாதா என்ற எண்ணம் இயல்பாக இயற்கையாக தோன்றுகிறது.

நாளொன்றுக்கு 2000 அன்பர்களின் பசிபோக்க தினசரி Rs 20,000 நிதி தேவைப்படுகிறது. மாத கடைசியில் ஒவ்வொரு மாதமும் 20 தேதி முதல் 30 தேதி வரை நன்கொடைகள் வருவதில்லை. அல்லது ஓரிரு நன்கொடைகள் மட்டுமே வருகின்றன.

தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின் விரும்பி வழங்கும் மாதாந்திர தொடர் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆதலால் தர்மம் செய்வது இறைவன்.
தர்மசாலையை நடத்துவது இறைவன்.
பயனாளியாக பயனை பெறுவதும் இறைவன்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
எல்லா புகழும்…இறைவனுக்கே.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தயவுடன்…
என்றென்றும் ஜீவகாருண்யப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay : 9444073635
– This Body is to Serve Others

தீபம் அறக்கட்டளை
7/8 தருமச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோயில் அருகில்
வேளச்சேரி சென்னை 42
தீபம் நிறுவனரிடம் பேச: 9444073635
தீபம் அலுவலகத்தில் பேச: 044 4335 8232
Gpay மூலம் நன்கொடைகள் வழங்க: 9444073635

அறக்கட்டளையின் அறப்பணிகளை பார்வையிட:
www.deepamtrust.org

Leave A Comment