அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆனந்தமாய் வாழ்வோம்!!!

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆனந்தமாய் வாழ்வோம்!!!

அன்னதான தொண்டு செய்வோம் !!!
ஆனந்தமாய் வாழ்வோம்!!!

திருவருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க பாதையில்
சென்னை வேளச்சேரி
நித்ய தீப தர்ம சாலையில்
மக்கள் பசியாற
தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார வாழையிலையில் உணவு வழங்கப்படுகிறது.
💥💥💥💥💥💥💥💥💥💥
24 x 7 x 365
வருடம் முழுவதும் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், தினசரி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தருமச்சாலையில்,
1) மூலிகை கஞ்சி காய்ச்சுதல்,
2) கூலி தொழிலாளிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் காலையில் கஞ்சி வழங்குதல்,
3) தர்மச்சாலையில் மூலிகை கஞ்சி வழங்குதல்
4) காய்கறி கொண்டு வருதல்
5) காய்கறி சுத்தம் செய்தல்,
6) காய்கறி வெட்டுதல்,
7) மதிய உணவு இரவு உணவு சமையல் செய்ய உதவுதல்,
பழங்கள் கொண்டு வருதல், நீர் மோருக்கு தயிர் வாங்கி வருதல்,
8) உணவு பரிமாறுதல்,
9) பாத்திரம் கழுவுதல்,
10) தருமச்சாலை மற்றும் ஞானசபையை சுத்தம் செய்தல்,
11) அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உணவு தயார் செய்தல், பாக் செய்தல், டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் கொண்டு போய் வழங்குதல்,
12) கோடைகால நீர்மோர் வழங்குதல்,
13) வாரந்தோறும் அகவல் பாராயணம்
14) மாதந்தோறும் மருத்துவ முகாம்
15) மாதந்தோறும் சன்மார்க்க சொற்பொழிவு
16) மாதந்தோறும் வடலூர் சத்திய தர்மச்சாலையில் மாத பூச அன்னதான தொண்டு
17) மாதந்தோறும் பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்க 80 கவர்களில் தனி தனியாக பேக் செய்தல்
18) சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உணவு தயார் செய்து பேக் செய்து டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று வழங்குதல்
19) முற்சுடர்களை தினசரி மூன்று முறை தேங்காய் எண்ணெய் ஊற்றி சரி செய்தல்
20) நன்கொடையாளர்களை வரவேற்று உபசரித்தல்
21) தீபம் அலுவலக பணிகள்

போன்ற தெய்வீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அல்லது விடுமுறை நாட்களில் பகுதி நேர, முழு நேர தொண்டு செய்ய வருக வருக என்று தீபம் அழைத்து மகிழ்கிறது. விருப்பமுள்ளவர்கள் தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொண்டு செய்வோம் !
நீண்டு வாழ்வோம் !
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தயவுடன்…
என்றென்றும் ஆன்ம நேய அறப்பணியில் …
நித்ய தீப தருமச்சாலை
7/8 தருமச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment