*அருட்பெரும்ஜோதி* *அருட்பெரும்ஜோதி* *தனிப்பெரும்கருணை* *அருட்பெரும்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 தினசரி சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசி போக்கும் தொடர் சமுதாயப் பணி... *பட்டினியில்லா... நோயில்லா... குற்றமில்லா ...வளமான பாரதம் படைப்போம்.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *மனித வடிவில் தெய்வம்* சென்னை கொட்டிவாக்கத்தில் சைவ ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் *திரு முத்துராமலிங்கம்* என்ற 30 வயது இளைஞர், மற்ற ஆன்ம அன்பர்களை போல் தினசரி இரவில் தருமச்சாலையில் சாப்பிட வருகிறார். வயிறார சாப்பிட்டு முடித்த பின், தருமச் சாலையில் உள்ள நித்திய ஜோதியை வணங்கி, வள்ளலார் காலடியில் தன்னுடைய தின வருமானத்திலிருந்து தினமும் ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 நன்கொடையாக வழங்குகிறார். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக தோன்றமளிக்கும் *திரு முத்துராமலிங்கம்* (படம் மேலே) உள்ளத்தில் வள்ளலின் பெருங்கருணை நிரம்பி இருப்பதை உணர்கிறோம். தினசரி நடைபெறும் இந்த தெய்வீக நிகழ்வு (தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் பசியோடு வருபவர்களை *தாயன்போடு பசி போக்குவதே* தெய்வீக நிகழ்வு தான்...) தருமசாலையில் மேலும் தெய்வீக உணர்வு உண்டு பண்ணுகிறது. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் அருகில் 3000 சதுர அடியில் அமைந்துள்ள *புதிய அன்ன தருமசாலை கட்டிடம் அமைய*, கட்டிட நிதியும், கட்டிட பொருட்களும், வழங்கிய அருளாளர்களும், மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் வள்ளல்களும், தீபத்தின் நலம் விரும்பிகளும், சன்மார்க சம்பந்திகளும், தங்கள் தங்கள் குடும்ப சமேதராய், தங்களுக்கு உகந்த நேரங்களில், உகந்த நாளில், நேரில் வந்திருந்து தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடத்தும் *அற்புதங்களை* *கண்டு மகிழுங்கள்.* உண்டு மகிழுங்கள். தொண்டு செய்து மகிழுங்கள். வழிபாடு செய்து மகிழுங்கள். தியானம் செய்து மகிழுங்கள். தர்மம் செய்து மகிழுங்கள். பாமாலை பாடி மகிழுங்கள். பூமாலை சார்த்தி மகிழுங்கள். 💥💥💥💥💥💥💥💥💥💥 தர்மசாலை கதவுகள் மக்களின் பசி போக்க சதா திறந்தே இருக்கின்றன. *எல்லா புகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கே!* 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுடன் ... *தீபம் அறக் கட்டளை* வேளச்சேரி சென்னை 9444073635 (12 கிராம தர்மசாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களின் பசி போக்கும் ஓர் அறத்தொண்டு நிறுவனம்) 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
26
Nov, 21